Published : 25 May 2015 12:36 PM
Last Updated : 25 May 2015 12:36 PM
Title: I Love Money!
Author: Suresh Padmanabhan
Publisher: Creati Ventures
பணத்தைப் பற்றியும் அதன் செயல்பாடு பற்றியுமான எளிமையான கருத்துகளைக் கொண்டுள்ளது இந்த புத்தகம். வாழ்க்கையில் பணம் எவ்வாறு வந்து செல்கிறது என்பதற்கான துல்லியமான செயல்முறைகளை விளக்குகிறது. பணம் நம்மிடையே ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் பணத்தின் முக்கியத்துவம் தொடர்பான தற்காலிக மற்றும் நிரந்தர தீர்வுகளைப் பற்றி பேசுகின்றது. மேலும், பணத்தை கையாளுதல், அதன் பெருக்கம், செலவு மற்றும் சேமிப்பு தொடர்பான செய்திகளையும் கொண்டுள்ளது.
Title: How to Become a Money Magnet
Author: Marie-Claire Carlyle
Publisher: Hay House
பணத்துக்கும் நமக்கும் இடையே உள்ள தொடர்பினை உணர்த்தும் புத்தகம் இது. பணம் தொடர்பான நமது உணர்வுகளை மாறுபட்ட கோணத்தில் பார்க்க வைக்கிறது. பணம் குறித்த அடிப்படை புரிதலையும், அதன் அறிவியல் கோட்பாடுகளையும் தெளிவுபடுத்தும் ஆசிரியர் அவற்றை நமது சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பதையும் கற்றுத்தருகிறார். நமது வாழ்க்கையில் அதிகப்படியான பணத்தை கொண்டுவருவதற்கான வழிமுறைகளையும், அதை வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து தக்கவைப்பதற்கான வழியையும் பேசுகின்றது.
Title: Money is My Friend for the New Millennium
Author: Phil Laut, Jeffery Combs and Lisa Kitter
Publisher: Jaico Publishing House
பணம் சார்ந்த நமது பயத்தினை நீக்கி, நிதி சுதந்திரத்தை உருவாக்கும் வழிகளைச் சொல்கின்றது இந்த புத்தகம். வாழ்க்கை, வளர்ச்சி, செல்வம், சம்பாத்தியம், செலவு, சேமிப்பு மற்றும் முதலீடு போன்ற நடவடிக்கைகளுக்கு வலிமையான ஆலோசனைகளை தருகின்றார் ஆசிரியர். தொழில் அனுகூலம், வளமான மனநிலை மற்றும் முதலீட்டு வரைமுறைகள் போன்றவற்றைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. மேலும், பணம் தொடர்பான உளவியல் ரீதியிலான செய்திகளைப் பற்றியும் பேசுகிறது.
Title: Serious Money
Author: Barrie Pearson
Publisher: Viva Books private Limited
நிலையான வளர்ச்சியினை எவ்வாறு அடைவது மற்றும் அதன்மூலம் வாழ்க்கையினை எவ்வாறு அனுபவித்து வாழ்வது, வளர்ச்சியை நோக்கிய நமது செயல்பாடு, ஊக்கம், வழிகாட்டுதலையும் தருகின்றார் ஆசிரியர். எளிமையான, நடைமுறை சார்ந்த மற்றும் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட உத்திகளைக் கொண்டுள்ளது. நிதிக்கான இலக்கினை நிர்ணயித்தல், வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்துதல், நேர மேலாண்மை குறித்தும் பேசுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT