Published : 13 Apr 2015 10:30 AM
Last Updated : 13 Apr 2015 10:30 AM
Title: Energize Your Workplace
Author: Jane E Dutton
Publisher: Wiley India
நிறுவன மேலாளர்கள், தங்களின் பணியாட்களின் சக்தியினை எவ்வாறு திறம்பட பயன்படுத்தி வெற்றிபெறுகிறார்கள் என்பதைப்பற்றி சொல்கின்றது இந்த புத்தகம். நிறுவனத் தொடர்புகளை வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல் தொடர்பான சிறந்த வழிமுறைகளைச் சொல்கின்றது. நிறுவனத்தின் பணியாட்களுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் நிறுவனம் தொடர்பான வெளியாட்களுக்கும் நிறுவனத்திற்குமான இணைப்பு ஆகியவற்றைப் பற்றியும் பேசுகின்றது.
Title: Be a Workplace Warrior
Author: Kathy Wilson
Publisher: Vega Books
நமக்கு பொருத்தமான வேலையினைப் பெற்று அதில் திறம்பட செயல்படுவதற்கான புதிய அணுகுமுறைகளைப்பற்றிச் சொல்லும் புத்தகம் இது. இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ற புதிய வழிகளில் பணியிடச் சூழலையும், பணியையும் அமைத்துக் கொள்ளவதற்கான உத்திகளைப்பற்றி சொல்லியிருக்கிறார் ஆசிரியர். மனஅழுத்தம், சுகாதாரம், வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, உணவுமுறைகள், நமது சூழ்நிலைகள் மற்றும் இலக்குகள் போன்றவற்றைப் பற்றியும் உளவியல் ரீதியாக நமது மனதை தயார்படுத்துதல் பற்றியும் தெளிவான கருத்துகளைக் கொண்டுள்ளது.
Title: Learning in the Workplace
Author: Stephen Billett
Publisher: Allen & Unwin
கற்றுக்கொள்ளுதல் என்பது பள்ளி, கல்லூரியுடன் முடிந்து விடக்கூடியதல்ல. அது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரக்கூடிய ஒன்று என்கிறார் ஆசிரியர். அவ்வகையில், பணியிடம் என்பது கற்றுக்கொள்வதற்கான மிகச்சிறந்த சூழல் என்றும், அது எவ்வாறு நடைபெறுகின்றது என்பதைப்பற்றியும் சொல்கின்றது இந்த புத்தகம். பணியிட சூழ்நிலைகளை நன்கு உணர்ந்து, அதனை கற்றுக் கொள்வதற்கான களமாக மாற்றும் உத்திகளைப்பற்றி சொல்கிறது இந்த புத்தகம்.
Title: Transform Your Workplace
Author: Lynda Ford
Publisher: Tata McGraw-Hill
பணியிட செயல்திறனுக்கான ஊக்கம், ஆற்றல் போன்றவற்றிற்கான, நிரூபிக்கப்பட்ட உத்திகளைப்பற்றிச் சொல்லும் புத்தகம் இது. இந்த உத்திகளின் மூலம் பணியிட சூழலை மாற்றியமைக்கும் வழிமுறைகளைச் சொல்கின்றார் ஆசிரியர். வேலை தொடர்பான பிரச்சினைகளில் பணியாட்களின் கருத்துகளை அறிதல், நேர்மறையான உடன்பாடுகளை தோற்றுவித்தல், ஊக்கமளித்தல் உள்ளிட்ட 52 உத்திகளை கொடுத்துள்ளார் ஆசிரியர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT