Published : 06 Apr 2015 12:46 PM
Last Updated : 06 Apr 2015 12:46 PM

சுற்றுலா

உலகிலேயே மிக அதிகமான வளர்ச்சியை எட்டிவரும் துறைகளில் முதலிடத்தில் இருப்பது சுற்றுலாத்துறைதான். மாறிவரும் பொருளாதார சூழலில் ஆண்டுதோறும் புதுப் புது இடங்களுக்கு சென்று பார்க்கும் மனிதர்களின் மனோபாவத்துக்கு ஏற்ப புதுப்புது சுற்றுலாத் தலங்கள் உருவாகிக் கொண்டே வருகின்றன.

$ டூர் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து இது உருவானது. கிரேக்க மொழியில் டூர்னோஸ் எனப்பட்டது.

$ சுற்றுலாப் பயணி என்ற வார்த்தை 1772-ம் ஆண்டிலிருந்தே புழக்கத்தில் உள்ளது.

$ சுற்றுலாத்துறை என்பது 1811-ம் ஆண்டில் உருவானது.

$ 1936-ல் தான் சர்வதேச சுற்றுலாப் பயணி என்ற சொல் உருவானது.

$ எண்ணெய், எரிவாயு தொழிலில் புரளும் பணத்துக்கு நிகராக அல்லது அதைவிட அதிக அளவில் பணம் கொழிக்கும் துறையாகத் திகழ்வதும் சுற்றுலாத் துறைதான்.

$ வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா மிக முக்கியமான துறையாகத் திகழ்கிறது.

$ கடந்த ஆண்டு சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகம்.

$ கடந்த ஆண்டில் சுற்றுலாப் பயணிகள் மூலமான ஏற்றுமதி வருமானம் ஒரு லட்சம் கோடி டாலராகும்.

$ நாடுகளிடையிலான வர்த்தகத்தில் 30 சதவீதம் சுற்றுலாப் பயணிகள் மூலமானது.

$ உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுற்றுலாவின் பங்களிப்பு 5 சதவீதம்.

$ சுற்றுலா சார்ந்த சேவைத்துறை ஏற்றுமதி 6 சதவீதமாகும்.

$ 23 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் துறை. அதாவது 12-ல் ஒருவர் சுற்றுலா சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

$ 10 கோடி பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு அளிக்கும் துறையாகும்

$ 2005-ல் சுற்றுலா தொழில் வருமானம் 4,75,000 கோடி டாலர்.

$ 2013-ல் இத்தொழில் மூலமான வருமானம் 1,15,900 கோடி டாலர்.

$ பயணிகள் போக்குவரத்துக்கு செலவிட்ட தொகை 21,800 கோடி டாலர்.

$ இந்தியாவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடமாகத் திகழ்வது ஆக்ராவில் உள்ள தாஜ்மகால்.

$ கோவா, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கு சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதுண்டு.

$ வெளிநாடுகளுக்கு சுற்றுலா போக வசதியில்லாவிட்டாலும் இப்போது உள்நாட்டு சுற்றுலா அதிகரித்துள்ளது. கோடை விடுமுறையில் சுற்றுலா தலங்களில் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை அனைத்து நாடுகளிலும் அதிகமாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x