Published : 20 Apr 2015 11:02 AM
Last Updated : 20 Apr 2015 11:02 AM
Title: How Winners Do It
Author: Michael W Mercer
Publisher: Magna Publishing Co. Ltd.
வெற்றி பெறுவதற்கான செயல்களாக எவற்றையெல்லாம் செய்ய வேண்டும், வெற்றி பெற்றவர்கள் எவ்வாறு இதனை செயல்படுத்தினார்கள் என்பதைப்பற்றிச் சொல்லும் புத்தகம் இது.
நடைமுறையில் மற்றவர்களுடன் இணைந்து செயல்படும் நிலையை எவ்வாறு விரைவாக உருவாக்கிக்கொள்வது மற்றும் இந்த இணைந்து செயல்படுதலின் சூட்சுமங்கள் என்னென்ன என்பதைப்பற்றியெல்லாம் பேசுகின்றது இந்த புத்தகம். மேலும், அலுவலக சந்திப்புகள் மற்றும் உரையாடல்களின் வழிமுறைகளையும் சொல்கின்றது.
Title: Be a Winner
Author: O P Sharma
Publisher: V & S Publishers
சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவதற்கும், தவறுகளிலிருந்து அனுகூலமான விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்குமான கருத்துகளைக் கொண்ட புத்தகம் இது. முழுக்க முழுக்க ஏற்ற இறக்கங்களைக் கொண்ட நமது வாழ்க்கையில், சரியான அணுகுமுறையில் சிறந்த விஷயங்களை உருவாக்கிக்கொள்வதற்கான வழிமுறைகளைச் சொல்கின்றது.
தவறுகளினால் உண்டாகும் பயம், விருப்பமான செயல்பாடு, வெற்றிக்கான இலட்சியம், வேலை அல்லது தொழிலில் ஈடுபாடு போன்றவற்றைப்பற்றிய தெளிவான விளக்கங்களைத் தருகின்றார் ஆசிரியர்.
Title: What Winners Do To Win!
Author: Nicki Joy
Publisher: John Wiley & Sons
வெற்றியாளர்களின் குணங்கள் என்ன?, அவர்களின் வெற்றி எவ்வாறு பெறப்பட்டது மற்றும் எவ்வாறு அவர்கள் தங்களை ஊக்குவித்துக்கொள்கின்றார்கள் போன்ற கருத்துகளை சொல்லித்தருகின்றது. கற்றுக்கொள்ளுதலின் அவசியம், நேர்மறையான அணுகுமுறை மற்றும் வெற்றியாளர்கள் தெரிந்து வைத்துள்ள அனைத்து விதமான வெற்றிக்கான சூட்சுமங்களையும் தனித்தனி பகுதிகளாக கொடுத்துள்ளார் ஆசிரியர்.
வெற்றியாளர்களால் உணரப்பட்ட வாழ்க்கை விதிகளைப்பற்றியும் சொல்கின்றது இந்த புத்தகம்.
Title: Winners Win and Losers Lose
Author: Nick Thornely and Dan Lees
Publisher: Roli Books
நாம் ஒவ்வொருவரும் வெற்றியாளராகவே விரும்புகின்றோம். ஆனால் நம்மில் சிலரே உண்மையில் வெற்றியாளராக வாழ்க்கையில் உயர்கிறோம்.
தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கான, வெற்றியை நோக்கிச் செல்வதற்கான திட்டம் மற்றும் செயல்கள் பற்றிய கருத்துகளைச் சொல்வதோடு, எது வெற்றியாளரை உருவாக்குகின்றது, வெற்றிக்கான பழக்க வழக்கங்களைப் பெறுதல், வெற்றியை நோக்கிய ஈடுபாடு மற்றும் வெற்றிகரமான குழுக்களின் செயல்பாடு ஆகியவற்றைப்பற்றி விளக்கங்களைக் கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT