Published : 06 Apr 2015 12:20 PM
Last Updated : 06 Apr 2015 12:20 PM

புத்தக அலமாரி- 06.04.2015

Title: Develop Your Training Skills

Author: Leslie Rae

Publisher: Kogan Page

விரைவாகவும் திறமையான வகையிலும் நம்முடைய பயிற்சி தொடர்பான திறனை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகளைச் சொல்கின்றது இந்த புத்தகம். அனைத்து விதமான பயிற்சி முறைகள், நவீன மற்றும் பாரம்பரிய பயிற்சிகள், செயல்பாட்டுத் திட்டங்கள், பயிற்சி முறைகள் தொடர்பான நிபுணர்களின் குறிப்புகள், பயிற்சி தொடர்பான செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத அம்சங்கள் ஆகியவற்றைப் பற்றிய தெளிவான புரிதலைத் தருகின்றது. மேலும், பயிற்சியாளர் என்பவர் யார்? அவரின் அறிவு மற்றும் திறமைகளைப் பற்றியும் பேசுகின்றது இந்த புத்தகம்.

Title: Corporate Training

Author: Marisa Brown & Others

Publisher: APQC Publications

தொழிலோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கைக்கான வெற்றியோ, நமக்குக் கிடைப்பது முறையான பயிற்சியில் மட்டுமே. தொழில் நிறுவனங்களுக்கான பயிற்சி முறைகளைப்பற்றிய புத்தகம் இது. தொழிலாளர்களின் திறமை மற்றும் அவர்களின் புதுமையான எண்ணங்கள் போன்றவற்றை அதிகரிப்பதற்கான ஒரே வழி அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியே என்கிறார் ஆசிரியர். பல ஆண்டுகளாக தொழில் நிறுவனங்களில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளும், உதாரணங்களும் நம்முடைய பயிற்சி செயல்முறைகளுக்கு உதவும் வகையில் சொல்லப்பட்டுள்ளது.

Title: Training Methods That Work

Author: Lois B Hart

Publisher: Viva Books Private Limited

ஒரு பயிற்சியாளராக நம்முடைய நம்பிக்கையின் அளவை அதிகரிப்பதற்கான வழிகளைச் சொல்கின்றது இந்தப் புத்தகம். பயிற்சி முறையினை தேர்வு செய்யவும், திட்டமிடவும் மற்றும் அதனை உபயோகப்படுத்தவும் தேவையான உத்திகளை அளித்து, அதன்மூலம் நம்முடைய சொந்த அணுகுமுறையிலிருந்து பயிற்சி செயல்பாட்டினை வடிவமைத்துக்கொள்ளும் வகையில் செய்திகளைக் கொண்டுள்ளது. மேலும், பயிற்சியின் அடிப்படை கொள்கைகள், பயிற்சி முறைகளின் நோக்கங்கள் மற்றும் உத்திகள் போன்றவற்றைப் பற்றியும் விளக்குகின்றது.

Title: Training Success

Author: Patrick Low Kim Cheng

Publisher: ICFAI University Press

பயிற்சியின் மூலம் எப்படி வெற்றிபெறுவது என்பதற்கான புத்தகம் இது. பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான பயிற்சி குறித்த விழிப்புணர்வினை அளிக்கும் வகையில் கருத்துக்களைக் கொண்டுள்ளது. பயிற்சி முறைகளின் அடிப்படை விளக்கங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய தெளிவான புரிதலைத் தருகின்றது. மேலும், பயிற்சி அளிப்பதற்கான திட்டங்களின் வடிவமைப்பு மற்றும் அதனை செயல்படுத்தும் முறைகள் பற்றிய எளிமையான வழிகளைச் சொல்கின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x