Published : 02 Mar 2015 12:02 PM
Last Updated : 02 Mar 2015 12:02 PM
1819ஆம் ஆண்டு முதல் 1900 வரை வாழ்ந்த ஜான் ரஸ்கின், இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த எழுத்தாளர் மற்றும் கலை விமர்சகர். மேலும், முக்கிய சமூக சிந்தனையாளராகவும், சிறந்த கொடை வள்ளலாகவும் திகழ்ந்தார்.
பயணங்களில் அதிக ஈடுபாடு கொண்ட ஜான் ரஸ்கின், அதன்மூலம் தன்னுடைய எழுத்துப் பணிக்கான உத்வேகத்தினைப் பெற்றார்.
கட்டுரைகள், கவிதைகள், விரிவுரைகள், ஓவியங்கள், கையேடுகள் மற்றும் கடிதங்கள் ஆகியன இவரது படைப்புகளில் அடங்கும். லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
$ உலகின் மிக அழகான விஷயங்கள் பெரும்பாலும் பயனற்றவையே என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; உதாரணமாக, மயில்கள் மற்றும் அல்லிப்பூக்கள்.
$ ஒருவன் என்ன நோக்கத்திற்காக செலவு செய்கிறான் என்பதைவிட அவன் எவ்வளவு பணத்தை சம்பாதிக்கிறான் என்பது முக்கியமல்ல.
$ ஒரு சிறிய அன்பை குழந்தைகளிடம் செலுத்திப் பாருங்கள், அதற்கான பெரிய பலனை அவர்களிடமிருந்து திரும்பப் பெறுவீர்கள்.
$ தரம் என்பது ஒருபோதும் எதிர்பாராமல் நிகழ்வது அல்ல; அது எப்போதும் ஒரு அறிவார்ந்த முயற்சியின் விளைவே.
$ ஒரு சிறிய சிந்தனை மற்றும் ஒரு சிறிய கருணையானது செல்வத்தைப் பெறுவதற்கான மிகப்பெரிய ஒப்பந்தத்தை விட மதிப்பு மிக்கது.
$ எப்பொழுது அன்பு மற்றும் திறமை இரண்டும் ஒன்றிணைந்து செயல்படுகின்றதோ, அப்பொழுது ஒரு தலைசிறந்த வெற்றியை எதிர்பார்க்கலாம்.
$ நல்ல வானிலை மட்டுமே பல வகைகளில் உள்ளதே தவிர, மோசமான வானிலை என்ற ஒன்று இல்லவே இல்லை.
$ அனுபவம், அறிவு மற்றும் ஆர்வம் ஆகிய ஒன்றுபட்ட சக்திகளின் செயல்பாடே திறமை எனப்படுகிறது.
$ பொய்யான விஷயங்களின் சாராம்சம் வார்த்தைகளில் இல்லை, வஞ்சகத்தில்தான் இருக்கின்றது.
$ குற்றத்தை தடுப்பதற்காக நீதிபதியின் கையிலுள்ள இறுதியான மற்றும் குறைந்த பயனுள்ள கருவியே தண்டனை என்பது.
$ இயற்கை காட்சியின் தொடக்கம் மற்றும் முடிவு இரண்டிலும் மலைகளே உள்ளன
$ உண்மையான சிறந்த மனிதர்களுக்கான முதல் சோதனை என்பது அவர்களின் பணிவே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT