Published : 02 Mar 2015 10:31 AM
Last Updated : 02 Mar 2015 10:31 AM
முந்தைய சென்னை விமான நிலையத்தை விட தற்போது இருக்கும் விமான நிலையம் சிறப்பாக இருக்கிறது. இந்தியாவின் மற்ற நகரங்களில் இருக்கும் விமான நிலையங்களுடன் ஒப்பிடும் போது சென்னை விமான நிலையம் நன்றாக இருக்கிறது என்றாலும், மேற்கூரை விழும் விபத்து 34-வது முறையாக தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
ஆனால் ஏர்போர்ட்ஸ் கவுன்ஸில் இண்டர்நேஷனல் அமைப்பு டெல்லி விமான நிலையத்தை சிறந்த விமான நிலையமாக தேர்ந்தெடுத்திருக்கிறது.
சர்வதேச அளவில் விமான நிலையங்களுக்காக இருக்கும் ஒரே அமைப்பு இதுதான். ஆண்டுக்கு 2.4 கோடி முதல் 4 கோடி பயணிகளை கையாளும் விமான நிறுவனங்களின் பட்டியலில் டெல்லி முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 2006-ம் ஆண்டு பட்டியலில் டெல்லி விமான நிலையம் 101 இடத்தில் இருந்தது. கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்தது கவனிக்கத்தக்கது.
இந்த பட்டியலில் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 50 லட்சம் முதல் 1.5 கோடி பயணிகளைக் கையாளும் விமான நிலையங்களில் ஹைதராபாத் விமான நிலையம் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
டெல்லி விமான நிலையம் கட்ட ஆரம்பித்த போது சமயத்தில் கழிப்பறை கூட மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. விமான நிலையத்தின் இரண்டாவது ரன்வே அமைக்கும் பணி நடக்கும்போது கீழே கழிவு நீர் கால்வாய் இருந்தது. எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டு பிடிக்கவே மூன்றுமாதம் செலவிடப்பட்டாதாக ஜிஎம்.ஆர் குழும அதிகாரி கூறியிருந்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே அந்த ரன்வே கட்டப்பட்டுவிட்டது.
உணவு, ரீடெய்ல், செக் இன், ரீடெய்ல், பாதுகாப்பு, வை-பை, கழிப்பறை உள்ளிட்ட 34 வகையான சேவைகளை பொறுத்து இந்த அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தவிர, விமானம் நிலையம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதால் விமான நிறுவனங்கள் தங்களது சேவையை பல நாடுகளுக்கு விரிவுபடுத்தி இருக்கிறார்கள்.2006-ம் ஆண்டு 45 சர்வதேச நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டது. ஆனால் இப்போது 65 நகரங்களுக்கு விமானம் இயக்கப்பட்டது. உள்நாடுகளில் இணைப்பும் அதிகரிக்கப்பட்டன. இருந்தாலும் இந்த விமான நிலையத்தில் 80 சதவீத விமானங்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுகின்றன.
இப்போது வருடத்துக்கு 4 கோடி பயணிகளை கையாளும் நிலையில் இருக்கும் டெல்லி விமான நிலையம் 2030-ம் ஆண்டு 10 கோடி பயணிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இந்த விமான நிலையங்கள் அமைத்தும் தனியார் அரசு கூட்டு ஒப்பந்தத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த பொருளாதார ஆய்வறிக்கையில் கூட விமான நிலையங்கள் துறையில் தனியார் அரசு கூட்டு ஒப்பந்தம் சிறப்பாக வெற்றி பெற்றிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இதே முறையில் மற்ற நகரங்களில் விமான நிலையங்கள் அமைக்க இருப்பதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்திருக்கிறது.
ஆனால் மேற்கூரை விஷயத்தில் சென்னையை போல் இல்லாமல் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT