Published : 09 Mar 2015 12:04 PM
Last Updated : 09 Mar 2015 12:04 PM

புத்தக அலமாரி- 09.03.2015

Title: Change Your Attitude

Author: Tom Bay and David Macpherson

Publisher: Pearson Power

நமக்கான சரியான அணுகுமுறையை கண்டறிவதன் மூலம், தனிப்பட்ட வெற்றி மற்றும் மகிழ்ச்சியை உருவாக்கிக்கொள்ள முடியும் என்கிறது இந்த புத்தகம். செயல்பாட்டிற்கான சரியான அணுகுமுறையே வெற்றிக்கான திறவுகோல் என்று சொல்லும் ஆசிரியர், அதை பெறுவதற்கான உத்திகளைக் கொடுத்துள்ளார்.

மேலும், நமது ஆரோக்கியமான பழக்க வழக்கம் போன்றவை நமது அணுகுமுறையை சரியானதாக மாற்றி வெற்றிக்கு வழி வகுக்கின்றன என்பதை நிகழ் உலக எடுத்துக்காட்டுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

Title: Attitude is Everything

Author: Jeff Keller

Publisher: Embassy Books

வெற்றிகரமான புதிய உயரத்திற்கு நமது வாழ்க்கையை கொண்டுசெல்லும் திறன் நம்மிடம் உள்ளது, அந்தத் திறனை செயல்படுத்த பெரிதும் உதவுவது நம்முடைய அணுகுமுறையே. எப்படி நம்முடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்வதன் மூலம் வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதற்கான புத்தகம் இது.

இதில் சொல்லப்பட்டுள்ள வெற்றிக்கான புதிய சாத்தியக்கூறுகள், பிரச்சினைகளை வாய்ப்பாக மாற்றுதல் மற்றும் தனிப்பட்ட திறமைகளை உருவாக்குதல் போன்றவற்றை கற்று, அவற்றை பயன்படுத்தும்போது வெற்றிகளைப் பெறலாம் என்கிறார் ஆசிரியர்.

Title: Attitude

Author: John C Maxwell

Publisher: Jaico Publishing House

நல்ல அணுகுமுறை வெற்றியை நோக்கி செல்கின்றதோ இல்லையோ எதிர்மறை அல்லது தீய அணுகுமுறையானது கண்டிப்பாக தோல்வியிலேயே முடியும் என்று சொல்லுகிறது இந்தப் புத்தகம்.

மேலும், ஒருவருடைய அணுகுமுறை அவரது செயல்திறனில் ஏற்படுத்தும் மாற்றங்கள், தீய அணுகுமுறையை மாற்றுவதற்கான உத்திகள், வெற்றி தோல்வியின் வரையறை, பிரச்சினைகளை முழுமையாக உணர்தல், அணுகுமுறையின் தோற்றம் மற்றும் தடைகளைப்பற்றி பேசுகின்றது இந்தப் புத்தகம்.

Title: Six Attitudes for Winners

Author: Norman Vincent Peale

Publisher: Jaico Publishing House

வெற்றியின் அடித்தளம் அணுகுமுறையே என்கிறபோது அதை உயர்த்திக்கொள்ள ஏன் முயற்சிக்கக்கூடாது? என்று கேட்கும் இந்த புத்தகத்தில் வெற்றியாளர்களுக்கு தேவையான அணுகுமுறை என்னென்ன என்பதைப்பற்றி சொல்லப்படுகிறது.

அதற்கான ஆறு அணுகுமுறைகள் பற்றி தனித்தனி பகுதிகளாக இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெற்றியாளர்களுக்கான பொதுவான பிரச்சினைகள் என்ன என்பதைப்பற்றியும் பேசுகின்றது இந்த புத்தகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x