Published : 23 Feb 2015 12:17 PM
Last Updated : 23 Feb 2015 12:17 PM

புத்தக அலமாரி- 23.02.2015

Title: Effective Decision Making

Author: John Adair

Publisher: Rupa and Co

மேலாண்மை துறையில், பல்வேறு விதமான சூழ்நிலையிலும் முக்கிய முடிவெடுக்க வேண்டியதற்கு தேவையான திறன்களைப்பற்றிய புத்தகம்.

மேலாண்மையியலில் முடிவெடுக்கும் திறன் என்பது ஒரு அத்தியாவசியமான செயல்பாடாகிவிட்டது என்று சொல்லும் ஆசிரியர், அதற்கான தீர்வுகளைப்பற்றி சமீபத்திய நிகழ்வுகளின் எடுத்துக்காட்டுகளுடன் சொல்லியுள்ளார். பிரச்சினைகளை அணுகவேண்டிய முறை, அதன் மதிப்பீடு, முடிவெடுத்தலின் கோட்பாடுகள் ஆகியவற்றை இந்த புத்தகம் பேசுகிறது.

Title: Making Tough Decisions

Author: Donald H Weiss

Publisher: Amacom

தொழில் மற்றும் வாழ்க்கையின் முக்கிய சூழ்நிலைகளில் எடுக்கவேண்டிய கடின முடிவுகளுக்கான செயல்முறைகளைப்பற்றி சொல்லும் புத்தகம். நம்மால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முடிவிலும் உள்ள அனைத்து வகையான அடிப்படை விஷயங்களையும் கண்டறியும் வழிகளைச் சொல்கின்றது.

சிக்கல்களை தீர்ப்பதற்கான முடிவுகளை எடுக்கும்போது கையாளவேண்டிய உத்திகள் என்ன? அந்த முடிவுகளுக்கான நடைமுறைகளில் மற்றவர்களை எவ்வாறு ஈடுபடுத்துவது போன்றவற்றைபற்றி பேசுகிறது இந்த புத்தகம்.

Title: Develop Your Decision Making Skills

Author: Paul Parcon

Publisher: Lotus Press

முடிவெடுத்தலில் உள்ள சிக்கலான பிரச்சினைகளைப் புரிந்துக் கொள்வதற்கான அடிப்படை அம்சங்களைப்பற்றி சொல்கிறது இந்த புத்தகம். நிச்சயமற்ற மற்றும் முரண்பாடான ஒரு சூழ்நிலையில், நமது மதிப்பீடு, அனுமானம் மற்றும் எடுக்கப்படும் முடிவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வழிகளைப் பற்றி சொல்கிறது.

மேலும், தொழில் நிறுவனங்களில் எடுக்கப்படும் முடிவுகளின் செயல்பாடு, முடிவெடுத்தலின் உத்திகள், தவறுகள் மற்றும் தடைகள் போன்றவற்றை பற்றியும் இந்த புத்தகத்தில் பேசப்பட்டுள்ளது.

Title: Making Decisions

Author: Dean Juniper

Publisher: Jaico Publishing House

முடிவெடுக்கும் திறன் பற்றிய முழுமையான புரிதலையும், அதன் மாற்று வழி பற்றியும் சொல்கின்றது இந்த புத்தகம். நல்ல முடிவுகளை எடுப்பதற்கு எந்த மாதிரியான திறமைகளில் கவனம் செலுத்த வேண்டும், அவற்றை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறார் ஆசிரியர்.

மேலும், முடிவுகள் எடுக்கப்பட முடியாமல் போவதற்கான காரணிகளைப்பற்றியும் பேசுகின்றது இந்த புத்தகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x