Published : 29 Dec 2014 12:54 PM
Last Updated : 29 Dec 2014 12:54 PM

புத்தக அலமாரி - 29/12/2014

Title: Happiness
Author: Matthieu Ricard
Publisher: Atlantic Books

நாம் ஒவ்வொருவரும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறோம் அல்லவா! ஆனால் எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது அல்லது எப்படி அதைப் பெருக்கிக்கொள்வது என்பதைப் பற்றி அறிந்திருக்கின்றோமா? மகிழ்ச்சி என்பது வெறும் உணர்வு சம்பந்தப்பட்டதல்ல என்று சொல்லும் இந்த புத்தகம். அது நமது திறமை சம்பந்தப்பட்டது என்றும் அதனை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது என்றும் கூறுகிறது. ஆசிரியரால் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் நாம் நம்மை புரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் இந்த உலகத்தோடு நமக்குள்ள உறவினைப் பற்றியும் தெளிவுபடுத்துகிறது இந்த புத்தகம்.

Title: Happiness is Free
Author: Hale Dwoskin and Lester Levenson
Publisher: Sedona Press

மகிழ்ச்சி எங்கிருந்து கிடைக்கிறது? என்ற கேள்விக்கு, அது நமக்குள்ளேயே இருக்கிறது என்று சொல்லும் இந்த புத்தகம், அவ்வாறு நமக்குள்ளே அடைந்துகிடக்கும் மகிழ்ச்சி, அமைதி போன்றவற்றை எவ்வாறு விடுவிப்பது என்று சொல்வது இதன் சிறப்பு. இலக்கினை அடைவது, பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும், மகிழ்ச்சி போன்றவற்றை உள்ளடக்கிய 7 பகுதிகளைக் கொண்ட இப்புத்தகத்தில், ஒவ்வொரு பகுதியிலும் நடைமுறை பயிற்சி மற்றும் ஆலோசனைகளை சொல்கிறார்கள் புத்தகத்தின் ஆசிரியர்கள்.

Title: Happier
Author: Tal Ben-Shahar
Publisher: Tata McGraw-Hill

எவ்வாறு மகிழ்ச்சியை உருவாக்குவது மற்றும் அதிலிருந்து நமது நீண்டகால இலக்கினை எப்படி அடைவது என்பதைபற்றி தெளிவான சில பயிற்சிகளின் மூலம் சொல்கிறார் இந்த புத்தகத்தின் ஆசிரியர். ஒரு ஆசிரியர் நேரில் சொல்லித்தருவது போல அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. மேலும், கல்வியில், பணியிடத்தில், உறவுகளுக்கிடையில் எவ்வாறு மகிழ்ச்சியை மேம்படுத்திக்கொள்வது என்றும் அதற்கான செயல்முறைகள் பற்றியும் விளக்குகிறது இந்த புத்தகம்.

Title: Happiness at Work
Author: Srikumar S Rao
Publisher: Tata McGraw-Hill

இன்றைய வாழ்க்கைச்சூழலில் பணியிடத்தில் மகிழ்ச்சி என்பது ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று. பணியிடத்தில் நமது செயல்பாடு முழுக்க முழுக்க நம்முடைய மகிழ்ச்சியைப் பொருத்தே அமைந்திருக்கிறது என்று சொல்லும் இந்த புத்தகம், அதற்கான புரிதலை நமக்கு ஏற்படுத்துகிறது. முடிவுகளைப்பற்றி கவலைப்படாமல், நமது ஆற்றலை முதலில் நம்முடைய செயல்பாடுகளில் முதலீடு செய்து அதன்மூலம் கிடைக்கும் பலனை பெறுவது பற்றி சொல்லி அதற்கான வழிகளைப் பட்டியலிட்டிருக்கிறார் ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x