Published : 01 Dec 2014 10:47 AM
Last Updated : 01 Dec 2014 10:47 AM

காக்கும் காப்பீடு!

¬ இன்சூரன்ஸ் எனப்படும் காப்பீடு இன்று அனைத்து பொருள்ளையும் காப்பீடு செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

¬ வெளிநாடு செல்ல வேண்டியிருந்தாலும் மருத்துவக் காப்பீடு கட்டாயமாகிவிட்டது.

¬ விலையுயர்ந்த மொபைல் போன் உபயோகிக்கும் நாம் அதையும் காப்பீடு செய்கிறோம்.

¬ தனி நபர் காப்பீடு மற்றும் உபயோகிக்கும் இருசக்கர வாகனம், கார், வசிக்கும் வீடு உள்ளிட்டவற்றையும் காப்பீடு செய்யலாம்.

¬ குடும்பத்தின் வருமானம் ஈட்டுவோர் திடீரென இறந்துவிட்டால், அவரைச் சார்ந்த குடும்பத்தினர் வாழ்வாதாரம் பாதிக்காமலிருக்க காப்பீட்டு தொகை உதவும்.

¬ பொருள்களின் மீதான காப்பீடு ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டியது. இதற்கு செலுத்தும் பிரீமியம் திரும்ப தரப்படமாட்டாது.

¬ ஆனால் எந்த பொருள் எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதோ அந்தத் தொகையை இழப்பீடாக பெறலாம். பொருளுக்கு சேதம் ஏற்பட்டாலோ, தொலைந்து போனாலோ, தீ விபத்தில் சேதமடைந்தாலோ இழப்பீட்டை பெறலாம்.

¬ இதேபோல மருத்துவக் காப்பீடும் உள்ளது. ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சை செய்ய நேரிட்டால் அப்போது மருத்துவக் காப்பீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.

¬ விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது பயிர் காப்பீடு மூலம் இழப்பீடு பெறலாம்.

¬ பொதுவாக அனைத்து காப்பீட்டு பிரீமியம்களுக்கும் வருமான வரி விலக்கு உண்டு.

¬ வாழ்வில் சேமிப்பு எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவுக்கு காப்பீடும் அவசியமாகிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x