Published : 15 Dec 2014 05:32 PM
Last Updated : 15 Dec 2014 05:32 PM

ஜிக் ஜிக்லர் - வெற்றி மொழி

ஜிக் ஜிக்லர் ஒரு அமெரிக்க தன்னம்பிக்கை பேச்சாளர், விற்பனைப் பிரதிநிதி மற்றும் புத்தக ஆசிரியர். மிகச் சிறுவயதில் தந்தையின் இழப்பு, உடன் பிறந்தவர்களின் இழப்பு என கடுமையான கஷ்டங்களுக்கு உட்பட்ட இவர், ஒரு விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்குச் சேர்ந்து பல நிறுவனங்களில் பணிபுரிந்து இறுதியில் ஆட்டோமோட்டிவ் பெர்பார்மென்ஸ் நிறுவனத்தில் ட்ரெயினிங் டைரக்டராக பதவியில் இருந்தார்.

மிகவும் வெற்றிகரமான தன்னம்பிக்கை பேச்சாளராக இருந்த இவருடய தன்னம்பிக்கை பேச்சுக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

# நேர்மை மட்டுமே ஒருவனை சிறந்த தலைவனாக்காது என்பது நிச்சயமான உண்மை. ஆனால், நேர்மையின்மை ஒருவனை நிச்சயமாய் தலைவனாக்காது.

# தோல்வியிலிருந்து நீங்கள் எதையாவது உருப்படியாகக் கற்றுக்கொண்டீர்கள் என்றால் நீங்கள் தோற்கவே இல்லை!

# ஒரு சாதனையைச் செய்ய பிரம்மாண்டமான ஆரம்பமெல்லாம் ஒன்றும் தேவையில்லை. ஆனால், ஏதாவது ஒரு நாள் ஏதாவது ஓரு செயலை ஆரம்பித்தால் மட்டுமே பிரம்மாண்டத்தை அடைய முடியும்.

# அடுத்தவர்களை நீங்கள் உற்சாகப்படுத்தும்போது உங்களுக்குள்ளும் உற்சாகம் ஊற்றெடுக்கின்றது. உற்சாகமே மனிதர்களின் நடுவே வித்தியாசத்தைக் காட்டுகின்றது.

# சிறந்தது வரும் என எதிர்பாருங்கள். மோசமானதற்கு தயாராயிருங்கள். வருவதில் முழு ஆதாயம் பெறத்தவறாதீர்கள்.

# வாடிக்கையாளரின் தேவையின்மை, பணமின்மை, அவசரமின்மை, விருப்பமின்மை, நம்பிக்கையின்மை என்ற 5-ம் விற்பனைக்குத் தடைக்கற்களாகும்.

# உங்களின் உயர்வின் அளவை நிர்ணயிப்பது உங்கள் கெட்டிக்காரத்தனம் அல்ல. உங்களுடைய மனப்பாங்கே.

# ஓரு விஷயத்தில் உங்களுக்கு இருக்கும் திறமை உங்களுக்கே தெரியும் போதுதான் அந்த விஷயத்தில் உங்களுக்கு பேரார்வம் பிறக்கின்றது.

# மனிதர்களுக்கு உங்களைப் பிடித்தால் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள். நம்பினால் உங்களிடம் வியாபாரம் செய்ய முன்வருவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x