Published : 22 Dec 2014 12:40 PM
Last Updated : 22 Dec 2014 12:40 PM
ஹென்றி ஃபோர்டு ஒரு வெற்றிகரமான அமெரிக்க தொழிலதிபர். ஃபோர்டு மோட்டார் கம்பெனியை நிறுவிய இவர் கார்களை அசெம்ப்ளி லைன் முறையில் உற்பத்தி செய்ய முடியும் என்பதை கண்டுபிடித்து, செய்தும் காட்டிய முன்னோடி. கார்கள் அனைவருக்குமானது என்ற நிலையை உருவாக்கியவரும் இவரே. பதினைந்து வயதில் இவருக்கு அவருடைய தந்தை பரிசளித்த பாக்கெட் கடிகாரத்தை பிரித்தும் சேர்த்தும் மெக்கானிசம் பயின்ற இவர் அக்கம் பக்கத்தில் இருக்கும் அனைவரிடத்திலும் உள்ள கடிகாரங்களை பிரித்தும் சேர்த்தும் பழகி ஒரு வாட்ச் மெக்கானிக்காக மாறினார்.
ஒரு அப்ரன்டிஸ் மெஷினிஸ்ட்டாக வேலைக்கு சேர்ந்த இவர் நாளடைவில் ஒரு இஞ்சினியராக உருவாகி போர்ட்-குவார்ட்ரி சைக்கிள் என்ற இயந்திரத்தால் தானே இயங்கும் வாகனத்தை முதலில் தயாரித்தார். தொழிலில் வல்லமை என்பது திறமையான பணியாளர்களை வேலைக்குச் சேர்த்து அவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்து நிலை நிறுத்திக்கொள்வதே என்ற கொள்கையைக் கொண்டவர் இவர்.
# எல்லாவற்றுக்கும் முன்னால் வெற்றியைப் பெற தயாராவதுதான் வெற்றியைப் பெறுவதற்கான முதல் படி.
# சும்மா குறை சொல்லாதீர்கள். தீர்வைச் சொல்லுங்கள்.
# பணத்தைத் தவிர வேறு ஒன்றையும் சம்பாதிக்காத தொழில் ஒரு தோல்வியடைந்த தொழிலே!.
# நீங்கள் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்று நினைப்பதை வைத்து உங்களுடைய மதிப்பை உயர்த்திக்கொள்ள முடியாது.
# பெரும்பாலானோர் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில் செலவிடும் நேரத்தை விட மிகக் குறைவான நேரத்தையே அதை தீர்ப்பது குறித்து சிந்திப்பதற்குச் செலவிடுகின்றனர்.
# சிந்திப்பது என்பது மிகவும் கடினமான வேலை. அதனாலேயேதான், மிகச்சிலரே அந்த வேலையைச் செய்கின்றனர்.
# தொழிலில் பெரிய பிரச்சினைகள் என ஒன்றுமே இல்லை. பல சின்னச் சின்ன பிரச்சினைகள்தான்.
# உடற்பயிற்சி என்பது ஒரு பித்தலாட்டம். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் அது உங்களுக்குத் தேவையில்லை. வியாதியுடன் இருந்தால் அதைச் செய்யக் கூடாது.
# ஒரு செயலை உங்களால் செய்ய முடியும் அல்லது முடியாது என உறுதியாக நீங்கள் நம்பினீர்கள் என்றால் அதுவே சரியானதாகும்.
# தொழிலதிபர்களுக்கு ஒரே ஒரு விதிதான். சிறந்த தரமான பொருட்களை குறைந்த விலையில் அதிக அளவிலான கூலி கொடுத்து தயாரிக்க வேண்டும் என்பதுதான் அது.
# அடுத்த வருடம் உலகம் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்று கற்றுக்கொள்ள முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT