Published : 11 Mar 2019 11:37 AM
Last Updated : 11 Mar 2019 11:37 AM
பெரும்பாலானோர் தங்களின் தனி நபர் முதலீட்டு முடிவுகளை எடுக்க, நிதியை நிர்வகிக்க தேர்ந்த நிபுணர்களையே ஆலோசனை கேட்கின்றனர். அதேபோல், ஆலோகர் களின் பரிந்துரைப்படி செய்யப்படும் முதலீடுகள், சொந்தமாக முடிவெடுத்து செய்யும் முதலீ்டுகளைக் காட்டிலும் அதிக வருமானத்தைத் தருவதாகவும் இருக்கின்றன.
ஆனால், நிரந்தர வைப்பு நிதி மற்றும் இண்டெக்ஸ் ஃபண்ட் போன்ற இலக்கு சார்ந்த முதலீட்டுத் திட்டங் களுக்கு முன்னுரிமை தருபவராக நீங்கள் இருந்தால், உங்களுடைய முதலீட்டு முடிவுகளை எடுக்கப் பெரிதாக ஆலோசகர்களின் உதவி தேவைப்படாது. ஆனால், அந்த சமயங்களில் உங் களுடைய நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்தக்கூடிய வழிகாட்டியாக ஒரு மாஸ்டர் தேவைப்படுவார்.
அவர், வெறுமனே முடிவுகளை எடுக்க உதவுபவர் மட்டும் அல்ல, நம்முடைய நிதி ஆதாரத்தைப் பாதிக்கக்கூடிய முடிவுகளை எடுக்க விடாமல் தடுப்பவராகவும் இருக்க வேண்டும்.
உதாரணமாக, நீங்களும் உங்கள் இணையரும் உபரியாக உள்ள சேமிப்பை முதலீடு செய்வது குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவர்களாக இருக் கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இருவருக்குமிடையே உள்ள வேறுபாடு களை முன்வைத்து சண்டையிடுவதை விட, உங்கள் நடத்தைகளை ஒழுங்கு படுத்தும் வழிகாட்டியை ஆலோசனை கேட்கலாம்.
பண விஷயங்கள் உங்களு டைய உறவுகளில் பிரச்சினைகளை ஏற் படுத்துகிறது எனில் ஆலோசகர்களையும் அணுகுவது அவசியமாக இருக்கும்.
சந்தை பத்து சதவீதத்துக்கும் மேல் இறங்கிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் மேலும் முதலீடு செய்வீர்களா, அல்லது முதலீடுகளை விற்றுவிடுவீர்களா? உங்க ளுடைய முதலீடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகிற உங்கள் குழந்தையின் கல்லூரி படிப்புக்கானதாக இருக்கும் பட்சத்தில், அடைந்த லாபத்தை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் விற்று விடுவீர்களா? இதுபோன்ற தருணங்களில் தான் நம்முடைய மனநிலைகளை ஒழுங்கு படுத்தக்கூடிய, உணர்வுகளை கட்டுப் படுத்தக்கூடிய ஒரு ஆலோசகர் நமக்குத் தேவையாக உள்ளார்.
பெரும்பாலானோர் முதலீடுகளைப் பொருத்தவரை இன்னொரு நாள் பார்க்கலாம், கொஞ்சம் காலம் ஆகட்டும், அடுத்த வருடம் செய்யலாம் என தள்ளிப்போடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இதற்கு காரணம் நமக்குள் இருக்கும் இழப்பு குறித்த பயம். இந்தப் பயத்தையும் நமக்குள் இருக்கும் வழிகாட்டி நீக்க வேண்டும்.
ஆனால், உங்களுடைய நடவடிக்கை களை ஒழுங்குபடுத்தக்கூடிய வழிகாட்டி யாக நீங்களே இருக்க முடியாது. என்ன இதுவரை நாமே நம்மை வழிநடத்தும் மாஸ்டராக மாறுவது எப்படி என்று பாடம் எடுத்துவிட்டு இப்போது இப்படி சொல்கிறேன் என்கிறீர்களா? காரணம் உள்ளது. உதாரணமாக, நீங்கள் முதலீடு செய்யும் தருணத்தில், விரைவில் லாபத் தை வெளியே எடுக்கக்கூடாது என்று முடிவு செய்வீர்கள்.
ஆனால், சில காலத் திலேயே எதிர்பாராத அளவுக்கு வரு மானம் வந்துவிடுகிறது எனில், அப்போது லாபத்தை எடுக்காமல் இருக்கமாட்டீர் கள். இதற்கு உங்களுடைய மூளையை நீங்கள் பழி சொல்லலாம், ஆனால், உணர் வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
நம் உணர்வுகளை வழிநடத்தும் ஒருவரை பெறுவது கடினமான காரியம் தான். ஆனால், முதலீட்டு திட்டங்களைத் தேர்ந்தெடுக்க உதவும் வழக்கமான ஆலோசகர் அல்ல நமக்கு வேண்டியவர். மாறாக, நம்முடைய உணர்வு நிலை களைப் புரிந்துகொண்ட, மேலும் இக்கட் டான தருணங்களில் நம்முடைய முக்கிய முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவும் வகையில் நம்மை வழிநடத்துபவராக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஒருவரை உங்களால் கண்டறிய முடியவில்லை எனில், உங்க ளுடைய இணையர் அல்லது நண்பரை, அவர்களுக்கு அதற்கான திறன் இருக் கும்பட்சத்தில், உங்களுடைய வழிகாட்டி யாகத் தேர்வு செய்யலாம். இதற்கான ஒப்பந்தமானது, சில குறிப்பிட்ட தருணங் களில் எடுக்க வேண்டிய முடிவுகளை முன்கூட்டியே பேசி முடிவு செய்துவிட வேண்டும். அப்போதுதான் இந்த முறையில் பலன் கிடைக்கும்.
இலக்கு நோக்கிய முதலீடுகளில் லாபத்தை எடுக்க நீங்கள் விரும்புகிறீர் எனில், அந்த சமயத்தில் முன்கூட்டியே நீங்கள் ஆலோசித்து எடுத்த முடிவை செயல்படுத்தலாம். லாபத்தை எடுக்க லாமா வேண்டாமா? எவ்வளவு லாபம் எடுக்க வேண்டும்? போன்றவற்றை பேசிக்கொள்ள வேண்டும். உதாரண மாக, உங்களுடைய பங்கு முதலீடுகளில் எதிர்பார்த்த வரிக்கு முந்தைய ஆண்டு வருமானத்தை விட, வருமானம் அதிக மாக கிடைக்கும்போது லாபத்தை எடுத்துக்கொள்ளலாம் என்ற முடிவை நீங்கள் எடுக்கலாம்.
இந்த முடிவை நீங்கள் எடுப்பதை மட்டும் உங்களுடைய இணை யரோ, நண்பரோ உறுதி செய்ய வேண்டும். ஆனால், அப்போதும் மாறுபட்ட கருத்துகள், விவாதங்கள், சண்டைகள் நீடிக்கிறது எனில், நீங்கள் ஆலோசக ரிடம்தான் ஆலோசிக்க வேண்டும். அவர் உங்களுடைய மாறுபட்ட கருத்துகளில் இருக்கும் பிரச்சினைகளைக் களைய உதவியாக இருப்பார். மேலும், அவரவர் கருத்துகளில் உள்ள நன்மை தீமைகளை யும் அறிந்துகொள்ள உதவுவார்.
அதன் மூலம் கிடைக்கும் புரிதலைப் பயன்படுத்தி அடுத்தடுத்த சூழ் நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் உங்கள் முதலீட்டு முடிவுகளை முன்கூட்டியே தீர்மானிக்கலாம். உதாரணத்துக்கு, அவர வர் புரிதல் மற்றும் திறமைக்கு ஏற்ப முதலீட்டு நிர்வாகத்தைப் பகிர்ந்துகொள் ளலாம். அதாவது, ஒருவர் பங்குகளை நிர்வகிக்கலாம், மற்றொருவர் கடன் பத் திரங்களை நிர்வகிக்கலாம். முக்கியமாக, எந்த நேரத்தில் எந்த முடிவை எடுக்க வேண் டுமோ அந்த முடிவை எடுக்கும் வகை யில் வழிகாட்டுதல் இருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT