Published : 25 Feb 2019 10:55 AM
Last Updated : 25 Feb 2019 10:55 AM

ஓய்வுக் காலத்தை திட்டமிட...

அரசு வேலைகள் தற்போது குறைந்து வருகின்றன. அதிலும் இப்போது அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் முன்புபோல் இருப்பதில்லை. இதனால் சம்பாதிக்கும் காலத்திலேயே ஓய்வுக்காலம் குறித்து திட்டமிடுதல் அனைவருக்குமே அவசியமாகிறது.

அதிலும் குறிப்பாக மருத்துவக் காப்பீடு என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்டது. காரணம் மருத்துவ சிகிச்சைக்கான செலவு மிக அதிகமாக இருப்பதுதான். அந்த வகையில் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனம் பங்குச் சந்தை முதலீட்டுடன் இணைந்த திட்டத்தை (யுலிப்) அறிமுகம் செய்துள்ளது. இது நிச்சயம் ஓய்வூதிய காலம் குறித்து திட்டமிடுவோருக்கு மிகவும் ஏற்றதாகும்.

மற்ற ஆயுள் கால யுலிப் மற்றும் வழக்கமான ஆன்லைன் யுலிப் திட்டங்களை விட இதில் பல கூடுதல் சலுகைகள் மற்றும் கட்டணக் குறைவு போன்ற வசதிகள் உள்ளன. ஓய்வுக் காலத்தில் வருமானத்துக்கு வழி செய்யும் வசதியும் இதில் உள்ளதால் இதன் மூலம் நிரந்தரமான தொகை ஓய்வுக் காலத்தில் கிடைப்பதோடு, ஆயுள் காப்பீடு வசதி கூடுதல் சலுகையாக இதில் கிடைக்கிறது.

இதில் ஆயுள் காப்பீடானது 99 அல்லது 100 வயது வரை வழங்கப்படுகிறது. இதனால் இத்திட்டத்தை தேர்வு செய்வோரின் வயது 99 வயதிலிருந்து கழித்தது போக கணக்கிடப்படுகிறது. இதில் காப்பீடு செலுத்தும் காலம் 7 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை உள்ளது.

இத்திட்டமானது ஆன்லைன் மூலமும் வழக்கமான படிவங்களை பூர்த்தி செய்யும் முறையிலும் கிடைக்கிறது. முதிர்வு காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படும். ஒருவேளை காப்பீடு செய்தவர் காப்பீட்டு காலத்தில் உயிரிழந்தால் இந்த ஃபண்டில் செலுத்தப்பட்ட தொகை அல்லது செலுத்திய பிரீமியத்தில் 105 சதவீதம், அல்லது காப்பீடு செய்த தொகை இவற்றில் எது அதிகமோ அது வழங்கப்படும்.

நிரந்தர வருமான திட்டம்

இந்தத் திட்டத்தில் மிகவும் சாதகமான அம்சம் என்னவெனில் ஓய்வுக் காலத்தில் நிரந்தர வருமானத்துக்கான வழி (ஆர்எல்ஐ) உள்ளது. இதை தேர்வு செய்தால் காப்பீடு செய்தவர் 55 வயதுக்குப் பிறகோ அல்லது 10 ஆண்டுகள் பிரீமியம் செலுத்திய பிறகோ பெறலாம். நீங்கள் தேர்வு செய்த தொகையின் அளவைப் பொறுத்து, உங்கள் யூனிட்டுகள் மாதந்தோறும் விற்பனை செய்யப்பட்டு அதற்கான தொகை அளிக்கப்படும்.

இதில் கூடுதல் அம்சம் என்ன வெனில் உங்களுக்கு மாதந்தோறும் 0.5 சதவீதம் அளவு கூடுதலாக  அளிக்கப்படும். இது நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்துக்கேற்ப இருக்கும். இந்த சலுகையானது உங்கள் நிதித்திட்ட மதிப்பு 105 சதவீதத்துக்கு கீழாகச் சரியும்போது அதனால் ஏற்படும் பாதிப்புகள் உங்களை பாதிக்காமலிருக்க வழங்கப்படுகிறது.

சிறப்பாக செயல்படும் நிதி

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் ஈக்விடி பண்ட் தொடக்கத்திலிருந்தே மிகச் சிறப்பாக செயல்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உதாரணத்துக்கு பஜாஜ் லைஃப் ஈக்விடி பண்ட் – 2 (தொடக்கத்தில் பெரிய நிறுவன பங்குகளில் முதலீடு) ஆண்டுக்கு 16 சதவீத வட்டி அளவுக்கு (பிப்19, 2019 நிலவரப்படி) ஐந்து ஆண்டுகளுக்கு கிடைக்கும்.

ஆனால் மற்ற யுலிப் திட்டங்கள் பெரிய நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருந்தாலும் அவை 12 சதவீத வட்டியையே அளித்துள்ளன. சில நிதி திட்டங்களோ 11 சதவீத வட்டியை அளித்துள்ளன.

மொத்தம் 8 நிதித் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கான வெவ்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன. குரோத் பண்ட் -2 (பெரும்பாலும் முதன்மைப் பங்குகள்) புளூ சிப் ஈக்விடி (இண்டெக்ஸ் பண்ட்) ஆக்ஸிலரேட்டர் மிட் கேப் ஃபண்ட் 2, கடன் பத்திரங்கள், லிக்விட் பண்ட்கள் என இவை வெளிவந்துள்ளன. நீண்டகால முதலீட்டு அடிப்படையில் கடன் பத்திரங்கள் ஆண்டுதோறும் மிகச் சிறப்பான வட்டியை வழங்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தக் கடன் பத்திரங்கள் 9 சதவீத வட்டியை அளித்துள்ளன.

கவர்ச்சிகரமான கூடுதல் சலுகை

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் லாங் லைஃப் திட்டத்தில் லாயல்டி புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இது ஆண்டுதோறும் செலுத்தப்படும் பிரீமியம் தொகைக்கு அந்தந்த ஆண்டு இறுதியில் வழங்கப்படுகிறது. இது 2, 4, 6, மற்றும் 7% என்ற அளவில் 5-9, 10-14, 15-19 மற்றும் 20-25 ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு வழங்கப்படுகிறது.

கட்டணங்கள்

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் லாங் லைஃப் கோல் காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டுத் தொகை மற்றும் காப்பீட்டு நிர்வாகக் கட்டணம் எதுவும் ஆன்லைனில் வாங்குவோருக்குக் கிடையாது. ஃபண்ட் நிர்வாகக் கட்டணம் 1.25 சதவீதம் முதல் 1.35 சதவீதம் வரை ஈக்விடி பண்ட்களுக்கும்,  0.95 சதவீதம் டெப்ட் ஃபண்ட்களுக்கும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்துக்கான மொத்த ரிட்டர்ன் 8 சதவீதமாகும். 20 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்துவதாக இருப்பின் இது 6.59 சதவீதமாகும். இது மற்ற யுலிப் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகும். யுலிப் திட்டங்களை தேர்வு செய்வோர் தங்களுக்குரிய திட்டங்களை தேர்வு செய்யலாம். இது யுலிப் திட்டமாக இருப்பதால் ஆயுள் காப்பீட்டுக்கு தனியே பிரத்யேகமாக டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை தேர்வு செய்வது குறித்தும் பரிசீலிக்கலாம்.

- dhuraivel.g@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x