Published : 22 Oct 2018 11:09 AM
Last Updated : 22 Oct 2018 11:09 AM
டட்சன் இந்தியா நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டட்சன் கோ ப்ளஸ் கார் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரின் அட்டகாசமான வடிவமைப்பு ஸ்டைலான, துடிப்பான, இளமையாக உணரும் வாடிக்கையாளர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருப்பதாக டட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பேஸ் வேரியன்ட் ஆரம்ப விலை ரூ. 3.83 லட்சம்.
இந்த விலையில் 5+2 இருக்கை வசதியுடன், மல்ட்டி யுடிலிட்டி காராகவும் காம்பேக்ட் பேமிலி காராகவும் இது வெளிவந்துள்ளது. இந்தப் பிரிவில் உள்ள மற்ற கார்களோடு ஒப்பிடுகையில் இதன் விலை சற்று குறைவு என்பது கூடுதல் ப்ளஸ். இந்த காரில் மேலும் பல மேம்பட்ட அம்சங்களையும் வாடிக்கையாளர்களுக்காக டட்சன் நிறுவனம் கொடுத்துள்ளது.
இந்த கார் ரைட் கன்ட்ரோல் அட்வான்ஸ்டு சிஸ்டம் மூலம் பாதுகாப்பான ஓட்டும் அனுபவத்தைத் தருகிறது. இதன் 1.2 லிட்டர் ஹெச்ஆர் 12 டிஇ பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 19.83 கிமீ வரை மைலேஜ் தருவதாக இருக்கிறது. இதன் புற வடிவமைப்பு ஸ்போர்ட்டியாகவும், உள் வடிவமைப்பு போதுமான இடவசதியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஓட்டுபவருக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
குறைவான விலையில் பிரீமியம் தரத்திலான வடிவமைப்பு, இடவசதியுடன் இந்த கார் உள்ளது. முன்புறத்தில் அழகான டைனமிக் கிரில் வடிவமைப்பு, முகப்பு விளக்கைச் சுற்றி பகலிலும் ஒளிரும் எல்இடி விளக்குகள் உள்ளன. 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், வாய்ஸ் ரெகக்னிஷன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
14 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல் கார் ஓட்டும் அனுபவத்தை மிகவும் இனிமையானதாக ஆக்குகிறது. 180 செமீ கிரவுண்ட் கிளியரன்ஸுடன் இந்திய சாலைகளுக்கு பொருத்தமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புற இருக்கையை மடித்து டிக்கியாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் ஓட்டுநர், பயணி ஆகிய இருவருக்கும் காற்றுப்பை பாதுகாப்பு அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ் இபிடி பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சாரும் உள்ளது.
ரூபி ரெட், பிரான்ஸ் கிரே, சன்ஸ்டோன் பிரவுன், கிரிஸ்டல் சில்வர் மற்றும் ஒபல் ஒயிட் ஆகிய ஐந்து வண்ணங்களில் நீட்டிக்கப்பட்ட ஐந்து வருட வாரண்ட்டியுடன் இந்த கார் கிடைக்கிறது.
புதிதாக கார் வாங்க நினைக்கும் இள வயதினர் தங்கள் குடும்பத்தினருடன் பயணிக்க இந்த கார் சிறப்பான தேர்வாக இருக்கும் என்று நிசான் இந்தியா தலைவர் தாமஸ் குயல் கூறியுள்ளார். இந்த கார் ஓட்டுவதற்குப் பாதுகாப்பாகவும், நல்ல அனுபவம் தருவதாகவும் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT