Published : 27 Aug 2018 12:40 PM
Last Updated : 27 Aug 2018 12:40 PM

வெற்றி மொழி: சத்யா நாதெள்ளா

1967 -ம் ஆண்டு பிறந்த இந்திய அமெரிக்கரான சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். இந்தியாவின் ஹைதராபாத்தில் பிறந்தவர். மைக்ரோசாப்ட்டின் முக்கியப் பொறுப்புகளில் நீண்டகாலம் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய “ஹிட் ரெஃப்ரஷ்” என்னும் புத்தகம் பெரும் புகழ்பெற்றது. இது ஆங்கிலம் தவிர ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. புகழ்பெற்ற டைம் நாளிதழ் வெளியிடும் உலகின் செல்வாக்குமிக்க நூறு நபர்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளார். உலகையே திரும்பிப்பார்க்க வைத்த புகழ்பெற்ற இந்தியர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

 

# ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்களை புதுப்பித்துக் கொள்கிறீர்கள்

# நான் புதிய விஷயங்களைப் பற்றி மிகவும் உற்சாகம் அடைகின்றேன்.

# எனது வாழ்க்கையைப் பற்றி நான் நினைக்கும்போது, தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்வதில் என் வெற்றிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

# பழைய போர்களில் நான் போராட விரும்பவில்லை. எனக்கு புதிதாகப் போராட வேண்டும்.

# இறுதியில், மனிதனுக்கு எதிராக இயந்திரம் என்று இருக்கப்போவதில்லை. இயந்திரங்களுடன் மனிதன் என்றே இருக்கப்போகிறது.

# உணர்ச்சிகரமாகவும் மற்றும் தைரியமாகவும் செயல்படுங்கள்.

# நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று நான் சொல்லும் ஒரு விஷயமே என்னை வரையறுக்கின்றது.

# நாம் விஷயங்களை வித்தியாசமாக செய்வதே கலாச்சார மாற்றம் எனப்படுகிறது

# புதிய விஷயங்களின் பக்கம் நீங்கள் செல்லவில்லை என்றால், உங்களால் தொடர்ந்து வாழ முடியாது.

# எனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும், கற்றலுக்கான ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டேன்.

# எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் தயாரிப்புகள் வரலாம் போகலாம், ஆனால் எங்கள் மதிப்புகள் காலமற்றது.

# இது தோல்வியைப் பற்றிய விஷயமல்ல, இது தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்வதைப் பற்றிய விஷயம்.

# எப்போதும் கற்றுக்கொண்டே இருங்கள். நீங்கள் கற்கவில்லை என்றால், பயனுள்ள விஷயங்களைச் செய்வதை நிறுத்திவிடுகிறீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x