Published : 03 Nov 2025 07:44 AM
Last Updated : 03 Nov 2025 07:44 AM

ப்ரீமியம்
குரோ ஐபிஓ வெளியீடு 4-ம் தேதி தொடக்கம்

நாட்டின் முன்னணி பங்குத் தரகு இணையதள செயலி குரோ-வின் தாய் நிறுவனமான பில்லியன்பிரெய்ன்ஸ் காரேஜ் வென்ச்சர்ஸ் புதிய பங்கு வெளியீடு 4-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி முடிவடைகிறது. ரூ.6,632 கோடி மதிப்பிலான மொத்தம் 66.32 கோடி பங்குகள் வெளியாகின்றன. ஒரு பங்கின் முகமதிப்பு ரூ.2 ஆக இருக்கும். ஒரு பங்கின் விலை ரூ.95 முதல் ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில்லரை முதலீட்டாளர்களுக்கு 10% பங்குகள் ஒதுக்கப்படும். சில்லரை முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 1 லாட் (150 பங்குகள்) முதல் அதிகபட்சம் 13 லாட் வரை விண்ணப்பிக்கலாம். வரும் 12-ம் தேதி பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.

இந்திய ஜிடிபியை மிஞ்சிய 'என்விடியா' - அமெரிக்காவைச் சேர்ந்த சிப் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் என்விடியாவின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வந்தன. கடந்த அக்டோபர் 29-ம் தேதி வர்த்தகத்தின் இடையே ஒரு பங்கின் விலை 212 டாலரை எட்டியது. இதன்மூலம் என்விடியா நிறுவன சந்தை மதிப்பு 5 லட்சம் கோடி டாலரைத் தாண்டியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x