Published : 29 Sep 2025 08:12 AM
Last Updated : 29 Sep 2025 08:12 AM

ப்ரீமியம்
கிராமப்புற நுகர்வை ஊக்குவிக்கும் | ஜிஎஸ்டி மறுசீரமைப்பு

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மத்திய அரசு கொண்டு வந்த மறுசீரமைப்பு அமலுக்கு வந்​துள்​ளது. இது​வரை 5%, 12%, 18%, 28% என 4 அடுக்​கு​களாக இருந்த ஜிஎஸ்​டி, இனி 5%, 18% என 2 அடுக்​கு​கள் மட்​டுமே இருக்​கும். மக்​களின் வாங்​கும் சக்​தியை அதி​கரிப்​பதும் வரி விகிதங்​களை எளிமைப்​படுத்​து​வதும்​தான் இந்த வரி சீரமைப்​பின் முக்​கிய நோக்​கம்.

இந்த ஜிஎஸ்டி மறு சீரமைப்​பால், நாம் தினசரி பயன்​படுத்​தும் நுகர்​பொருட்​கள் மற்​றும் உணவுப் பொருட்​களின் விலை கணிசமாக குறைந்​துள்​ளது. எண்​ணெய், ஷாம்​பு, பற்​பசை, குளியல் சோப்​பு, டூத் பிரஷ், ஷேவிங் கிரீம் போன்ற அதிக அளவில் விற்கப்​படும் நுகர் பொருட்​கள் (எப்​எம்​சிஜி) மீதான வரி 18-லிருந்து வெறும் 5 சதவீத​மாக குறைந்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x