Published : 09 Jun 2025 07:45 AM
Last Updated : 09 Jun 2025 07:45 AM
கடந்த மாத இறுதியில் (மே 24) நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமணியம், 'இந்தியா உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துவிட்டது' என்று அறிவித்தார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) உலக அளவில் 4-வது இடத்தை எட்டிவிட்டது என்பது இதன் பொருள். இந்த அறிவிப்பைப் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். எல்லா ஊடகங்களிலும் செய்தி வெளியானது.
கடந்த 2 வாரங்களில் இது பேசு பொருளாக இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்திலிருந்த இந்தியா, இப்போது நான்காவது இடத்துக்கு வந்திருப்பதாக பலர் பெருமைப்பட்டனர். உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும்போது இந்தியாவின் வளர்ச்சி ஆண்டுக்கு 6%க்கும் அதிகமாக இருப்பதால்தான் இது சாத்தியமானது என்று மகிழ்ந்தனர் வேறு சிலர். விமர்சனங்களுக்கும் குறைவில்லை. இந்தியா இன்னும் 4-வது இடத்தை எட்டவில்லை என்பது முதல் குற்றச்சாட்டு. இந்த வளர்ச்சியால் பரந்துபட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்பது அடுத்த குற்றச்சாட்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT