Published : 03 Mar 2025 06:08 AM
Last Updated : 03 Mar 2025 06:08 AM
தொழில்நுட்ப வளர்ச்சியால் தரை, நீர், ஆகாய போக்குவரத்தில் வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை ஐஐடி ஆதரவுபெற்ற வாட்டர்பிளை டெக்னாலஜிஸ் என்ற ஸ்டாட்ர்ட்-அப் நிறுவனம், கடல்வழி போக்குவரத்தில் புதியதொரு பரிமாணத்தை ஏற்படுத்தும் வகையில் மின்சார சீகிளைடர் எனப்படும் கடல்வழி பயணிக்கும் வாகனத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கான முன்மாதிரியை பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ இந்தியா கண்காட்சியில் அந்த நிறுவனம் காட்சிப்படுத்தியது.
விங்-இன்-கிரவுண்ட் (டபிள்யூஐஜி) என்று அழைக்கப்படும் இந்த சீகிளைடர்கள் ஒரு தனித்துவமான வடிவமைப்பை கொண்டது. இது கடலோர பகுதியில் கடல் மீது பறக்கும். கடல் மட்டத்திலிருந்து மேல் எழும்பி சுமார் 4 மீட்டர் உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT