Published : 29 Jul 2024 06:15 AM
Last Updated : 29 Jul 2024 06:15 AM
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் சொத்துகள் தொடர்பான நீண்டகால மூலதன ஆதாய (எல்டிசிஜி) வரியை 20 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக குறைத்தார். அது மக்களுக்கு பலன் அளிக்க கூடியதுதான். ஆனால், அதேநேரத்தில் 2001-02-ம் நிதியாண்டுக்குப் பிறகு வாங்கிய மனைகள், வீடுகள், கடன்பத்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கான இண்டக்சேஷன் முறையை நிதியமைச்சர் நீக்கியது நடுத்தர மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
அதேசமயம், 2001-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு வீடு, மனை, பங்கு, கடன் பத்திரங்களை வாங்கியவர்களுக்கு இந்தப் புதிய இண்டக்சேஷன் முறை ரத்து பொருந்தாது என்பதையும் நிதியமைச்சர் பட்ஜெட்டில் தெளிவுபடுத்தினார். இண்டக்சேஷன் குறியீட்டு முறை என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ஒரு சொத்தை தற்போது விற்க நேரிடும்போது, பணவீக்கத்தின் விளைவை பிரதிபலிக்கும் வகையில் முதலீட்டின் கொள்முதல் விலையை சரி செய்வதற்கான நடைமுறையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT