நமது உலகின் சில முக்கிய நகரங்கள் அவற்றைச் சுற்றியுள்ள கடல் மட்டம் உயர்வதை விட வேகமாக மூழ்கி வருவதாக ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறைந்தது 33 நகரங்கள் ஆண்டுக்கு 1 செ.மீ.க்கும் அதிகமாக மூழ்கி வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கடலோர நகரங்கள் அவற்றின் வெள்ள அபாயங்களில், இந்த மூழ்கும் போக்கையும் சேர்க்க வேண்டும்.
நகரங்கள் மனிதக்குலத்தின் மிகப்பெரிய சாதனைகளையும், சவால்களையும் பிரதிபலிக்கின்றன. 2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் 68% பேர் நகர்ப்புறங்களில் வாழ்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. மோசமாக வடிவமைக்கப்பட்ட நகரங்களால் இதை எப்படிச் சமாளிக்க முடியும் என்கிற கேள்விக்குத் தெளிவான பதில் இல்லை என்பதே இன்றைய யதார்த்தம்.
WRITE A COMMENT