Last Updated : 10 Jan, 2015 04:19 PM

 

Published : 10 Jan 2015 04:19 PM
Last Updated : 10 Jan 2015 04:19 PM

ஒளிப்படக் கலைஞர் ‘மயில்

இயற்கை - சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குச் சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல், தமிழகத்தின் மற்றப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தொடர்ச்சியாகப் பங்களித்து வந்துள்ளனர். நவீனத் தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட இக்காலத்தில், ஒளிப்படக் கலை மூலம் இயற்கை பாதுகாப்புக்குப் பங்களித்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அவர்களில் குறிப்பிடத்தக்கவரான சேலத்தைச் சேர்ந்த பிரபலக் காட்டுயிர் - இயற்கை ஒளிப்படக் கலைஞர் எம்.எஸ். மயில்வாகனன் (66) சமீபத்தில் காலமானார்.

தொழில்முறை பல் மருத்துவரான அவர் குளோஸ் அப், மேக்ரோ காட்டுயிர் படங்களை எடுப்பதற்குப் புகழ்பெற்றவர். இவருடைய பல படங்கள் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன. சர்வதேச இதழ்கள், காட்டுயிர் இதழ்களில் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளன. இங்கிலாந்து ராயல் ஃபோட்டோகிராஃபிக் சொசைட்டி, ஃபிரான்ஸ் சர்வதேச ஃபோட்டோகிராஃபி கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் உறுப்பினராக இருந்தார்.

இளைஞர்களிடையே இயற்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் இயற்கை பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்தார். சேலம் மாவட்டத்தின் மதிப்புறு காட்டுயிர் பாதுகாவலராகவும் இருந்துள்ளார்.

ஞாபகம் வருதே

ஜிம் கார்பெட் புத்தகங்களை வாசித்துவிட்டுச் சிறு வயதில் என் அப்பா அதை நடித்துக் காட்டியது, காட்டின் மீதான காதலை அதிகரித்தது. அதுவே பிற்காலத்தில் காட்டுயிர் ஒளிப்படக் கலை ஆர்வமாக வளர்ந்தது. காட்டிலுள்ள சிறிய விஷயங்களைப் பலரும் பார்க்கக்கூட மாட்டார்கள். ஆனால், எனது கேமராவில் நூற்றுக்கணக்கான அழகு கொஞ்சும் வண்ணத்துப் பூச்சிகள், பட்டாம்பூச்சிகள் (அந்துப்பூச்சிகள்), மலர்கள், தவளைகள், எட்டுக்கால் பூச்சிகளைப் படம் எடுத்துள்ளேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x