Published : 25 Nov 2014 04:06 PM
Last Updated : 25 Nov 2014 04:06 PM
பறவைகளுக்கு அலகுதான் முதன்மையானது. ஒரு பறவைக்கு உள்ள அலகின் அமைப்பைப் பொறுத்தே, அந்தப் பறவையின் உணவைச் சொல்லிவிடலாம். இங்கே உள்ள பறவையினுடைய அலகின் முன்பகுதியைப் பாருங்கள். இரண்டு கரண்டிகளை மேலும் கீழும் வைத்தது போல் இருக்கிறதா? அதனால்தான் இதன் பெயர் கரண்டிவாயன்.
ஆங்கிலப் பெயர்: Eurasian Spoonbill
வேறு பெயர்கள்: துடுப்புவாயன், அகப்பைவாயன், கரண்டிமூக்கன், துடுப்பு மூக்கு நாரை.
அடையாளங்கள்: உள்நாட்டு வலசைப் பறவை. வளர்ப்பு வாத்தைவிடக் கொஞ்சம் பெரிதாக இருக்கும். உடல் வெள்ளையாகவும் கால்கள் கறுப்பாகவும் இருக்கும். அலகு கொஞ்சம் நீண்டது. கால்களும் கழுத்தும்கூட நீளமானவைதான். நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள மரங்களில் மற்ற நீர்ப்பறவைகளின் கூடுகளுடன் இதுவும் கூடு அமைக்கும்.
உணவு: நீர்நிலைகளில் மீன்கள், நத்தைகள், புழு பூச்சிகள் போன்றவற்றைப் பிடித்துண்ணும்.
தனித்தன்மை: இனப்பெருக்கக் காலங்களில் கரண்டிவாயனின் தலையில் கொண்டையைப் போன்ற வெள்ளைத் தூவிகள் காணப்படும்.
தென்படும்இடங்கள்: வேடந்தாங்கல், கூந்தங்குளம், கோடிக்கரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT