Published : 25 Mar 2014 12:00 AM
Last Updated : 25 Mar 2014 12:00 AM
தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் அமைக்கப்பட உள்ள நியூட்ரினோ ஆய்வகம், அணுக்கழிவு மையமா என்ற புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் ரூ.1,450 கோடி யில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது. அணுவைவிட மிகச் சிறிய, கண்ணுக்குப் புலப்படாத நியூட்ரினோ துகளை ஆராய்வதற்கான இந்த மையம் மூலம், பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிய முடியும் என்று கூறப்படுகிறது.
இதற்காக நீலகிரி முதுமலைப் பகுதியில் சுரங்கம் தோண்டி "இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்தை" (ஐ.என்.ஓ.) அமைக்க முதலில் திட்டமிடப் பட்டது. அங்கு எதிர்ப்பு எழுந்த தால், தேனி மாவட்டம் போடி மலைப் பகுதியில் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆராய்ச்சிக்காக 1300 மீட்டருக்குக் கீழே இரண்டு குகைகள் அமைக்கப்படப் போவதாக ஐ.என்.ஓ. நிறுவனம் தெரிவிக்கிறது. பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தேவருகின்றனர்.
இப்போது தமிழ்நாடு மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு நியூட்ரினோ ஆய்வகம் சார்பில் சூழல் தாக்க மதிப்பீடு செய்ய விண்ணப் பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிறுவனப் பிரிவு என்ற தலைப்பின் கீழ் நியூட்ரினோ ஆய்வகம் என்பதற்குப் பதிலாக, "1 (இ) அணுசக்தி உலைகள், அணு எரிபொருள் செயல்முறை உலைகள், அணுக் கழிவு மேலாண்மை உலைகள்" என்ற பிரிவின் கீழ் விண்ணப் பிக்கப்பட்டுள்ளது.
தற்போது, அந்த நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பத்தி லேயே அணுகழிவு தொடர் பாக குறிப்பிடப்பட்டுள்ளது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் சந்தேகத்தை வலுப்படுத்துவது போல் உள்ளது.- ஆதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT