Published : 07 Oct 2014 12:46 PM
Last Updated : 07 Oct 2014 12:46 PM
சாக்கடைகளிலும் ஆறுகளிலும் பிளாஸ்டிக் பைகள் மிதந்து கொண்டிருப்பதும் அவ்வப்போது நீர்ப் போக்கை அடைத்து நாற்றமெடுப்பதும்தான் பிளாஸ்டிக் மாசு ஏற்படுத்தும் பிரச்சினை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
பிளாஸ்டிக் பாட்டில் மூடிகளைத் தெரியாமல் முழுங்கும் மீன்கள், பறவைகள், மற்ற உயிரினங்களின் நிலைமை என்னவாகிறது தெரியுமா? பிளாஸ்டிக் மாசைப் பற்றி பேசுவதற்கு முன் நுண்ணிய பிளாஸ்டிக் மணிகள் ஏற்படுத்தும் பிரச்சினையைப் பற்றி பார்ப்போம்.
சலவைத்தூள், ஐஸ் குச்சிகள், பிளாஸ்டிக் பைகள், சருமப் பராமரிப்பு பொருட்கள் போன்றவற்றில் பத்து மைக்ரான் அளவே இருக்கும் சிறிய பாலியெத்திலீன், பாலி புரொபிலீன் மணிகள் இருக்கின்றன. உங்கள் முகத்தில் இருந்து துணிகள்வரை எல்லாவற்றையும் சுத்தம் செய்வதாக சத்தியம் செய்யும், அந்த வண்ணப் பிளாஸ்டிக் மணிகள் உண்மையில் என்ன செய்கின்றன?
இந்த மக்காத துகள்களை அவ்வளவு எளிதாகச் சுத்திகரித்துவிட முடியாது. இந்த நுண்ணிய பிளாஸ்டிக் மணிகள் கழிவுநீரில் இருக்கும் மோட்டார் எண்ணெய், பூச்சிக்கொல்லிகளைக்கூட உறிஞ்சிக்கொள்ளும் தன்மை கொண்டவை. அப்படியென்றால், கடைசியாக அவை எங்கே போகின்றன? நம் சாப்பிடும் உணவுடன் தொடர்புடைய உணவு சங்கிலிக்குத்தான்.
இந்த மாசுபாடு ஏற்படுத்தும் ஆபத்து பற்றி இப்போதுதான் விஞ்ஞானிகளும் சூழலியலாளர்களும் எச்சரிக்கை அடைந்திருக்கின்றனர்.
ஏற்கெனவே, இந்த நுண்ணிய பிளாஸ்டிக் மணிகள் உலகின் பெருங்கடல்களிலும் உள்ளூர் நீராதாரங்களிலும் அதிகமாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இனிமேல்தான் அது எடுக்கப்போகும் பூதாகர ஆபத்துகள் தெரியவரும்.
தொகுப்பு: என்.கௌரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT