Published : 15 Oct 2013 06:13 PM
Last Updated : 15 Oct 2013 06:13 PM
"உலகிலிருந்து மற்ற உயிரினங்கள் முற்றிலும் அற்றுப் போவதால் (extinction), நமக்கு என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?" என்று கேட்பவர்கள், ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். இதோ ஒரு புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த பெரும் பாலூட்டிகள், புவிப் பரப்பில் பரவலாகத் திரிந்தபோது அந்தப் பகுதிகளில் கழிவு, உடல் மக்கிப் போனதன் மூலமாக ஊட்டச்சத்துகளைப் பரப்பியுள்ளன. உயிரினங்கள் அற்றுப் போவதால் ஊட்டச்சத்து இழப்பு எப்படி ஏற்படும் என்பதைக் கணக்கிட அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு கணித மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
ஒரு பெரும் உயிரினம் முற்றிலும் அற்றுப் போனதால் வளமான சமவெளிப் பகுதிகளைத் தாண்டியுள்ள பிரேசிலின் கிழக்கு அமேசான் பகுதியில் பாஸ்பரஸ் 98 சதவிகித இழப்பு ஏற்பட்டுள்ளது. உயிரினங்களும் தாவரங்களும் வளர பாஸ்பரஸ் ஊட்டச்சத்து மிகவும் அவசியம். பாலூட்டிகளில் மிக அதிகமாக உள்ள இரண்டாவது மிகப் பெரிய கனிமம் பாஸ்பரஸ். தாவரங்களில் உயிரோடு உள்ள ஒவ்வொரு செல்லிலும் அது அவசியம் இருக்க வேண்டும்.
இப்போது இப்படி சிந்தித்துப் பார்ப்போம். 2025இல் எல்லா யானைகளும் அற்றுப்போய்விட்டால், அதன் பிறகு நதிகளையும் மலைகளையும் கடந்து யார் ஊட்டச்சத்துகளை எடுத்துச் செல்வார்கள்? இது மட்டுமில்லாமல் நதிகள் வழியாகத்தான் பல்வேறு ஊட்டச்சத்துகள் நம்மை வந்தடைகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT