Published : 22 Sep 2018 10:55 AM
Last Updated : 22 Sep 2018 10:55 AM

அஞ்சலி: மரம் வளர்த்த மனிதர்

சூழலியலாளர் ‘மரம்’ தங்கசாமி உடல் நலக் குறைவால் புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடியில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஞாயிறு அன்று (15.09.18) காலமானார். மரம் வளர்ப்பதற்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் அவர்.

50 ஆண்டுகளுக்கு முன்பு தனியொரு மனிதனாக ஒரு குறுங்காட்டை உருவாக்கிய சாதனையாளர் அவர்.

பாரம்பரியமான விவசாய முறைகளிலிருந்து விலகித் தனது நிலத்தில் மரக் கன்றுகளைப் பயிரிட்டார் தங்கசாமி. பாசனத்துக்கு வாய்ப்பில்லாத அந்தச் சூழலில் விடாப்பிடியாக முயன்று இந்தச் சாதனையைச் செய்தார். இன்று நாடே வியக்கும் வண்ணம் ஒரு உயிர்ச் சங்கிலியையே இந்தக் காட்டின் மூலம் அவர் உருவாக்கிவிட்டார். வேம்பு, தேக்கு, ஈட்டி, மனோரஞ்சிதம், பலா உள்ளிட்ட பல வகையான மரங்களும் அரிய மூலிகைச் செடிகளும் இந்தக் காட்டில் உள்ளன. இந்தக் காட்டுக்குக் கற்பகச்சோலை எனப் பெயரிட்டுள்ளார் அவர்.

அவரது இந்த அரும் சாதனைக்காகத் தமிழக அரசின் ‘சுற்றுச்சூழலுக்கான அண்ணா விருது’ உள்ளிட்ட பல அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். உழவர் ஆய்வு மன்ற அமைப்பாளராகவும் புதுக்கோட்டை மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

“வருங்காலச் சந்ததிகளிடம் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். அதன் மூலமே சுற்றுச்சூழலைக் காக்க முடியும்” எனச் சொன்ன தங்கசாமி, அதற்காகப் பாடலும் எழுதியிருக்கிறார்.

“மரங்களும் செடிகளும்தான் உங்க சாமி

மனசு வைக்கக் கெஞ்சுறே நா(ன்) தங்கசாமி”

இவை அந்தப் பாட்டின் சில வரிகள்.

தொகுப்பு: ஜெய்தங்கசாமி உருவாக்கிய குறுங்காடு‘மரம்’ தங்கசாமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x