Published : 09 Feb 2019 10:53 AM
Last Updated : 09 Feb 2019 10:53 AM

பனையோலைக் குடுவைப் பயிற்சி

பனைநாடு இயக்கம் வழங்கிய பனை ஓலைக் குடுவைப் பயிற்சி பண்டாரவிளை அருகிலுள்ள இலங்கை ஆழ்வார் தோட்டத்தில் வைத்து கடந்த 28.01.2019 முதல் 02.02.2019 வரை நடந்தது. இதில் தமிழகம் எங்கிலுமிருந்து பனை ஆர்வலர்கள், சூழியயல் செயல்பாட்டாளர்கள், கைவினைக் கலைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். குமரி மாவட்டத்திலுள்ள வாழ்வச்சகோஷ்டம் என்ற பகுதியைச் சார்ந்த தங்கப்பன் உதவியோடு பனைநாடு என்ற அமைப்பு பனை சார்ந்த பாரம்பரிய பொருட்களை அறியாத புதிய தலைமுறைக்கு இப்பயிற்சியை வழங்கியது. இந்தப் பயிற்சி முகாமை அருட்பணி. காட்சன் சாமுவேல் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்குப் பனை ஓலையில் செய்த தொப்பியும், பனை ஓலையில் செய்த சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தானியேல் என்ற பனைத்தொழிலாளி குடுவை செய்த அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

வேளாண்மை பல்கலைக்கழகப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்  தக்காளி, நோனி ஆகியவற்றிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது. பயிற்சிக் கட்டணம் ரூ.1,500. மேலதிகத் தகவலுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்பத் துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641 003. தொலைபேசி எண் 0422 - 6611268, 1340.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x