Published : 14 Oct 2025 06:48 AM
Last Updated : 14 Oct 2025 06:48 AM

ப்ரீமியம்
மரங்களின் மகத்துவம் | நம்மாழ்வார் சொன்னது

மரங்​கள் மனிதர்​களுக்​கும், விலங் கு​களுக்​கும், பறவை​களுக்கும் உணவளிக் கின்​றன. கார்​பன் வாயுவை உறிஞ்​சி, நாம் சுவாசிப்​ப​தற்​கான வாயுவை மரங்​கள் வெளி​யிடு​கின்​றன. அப்​படி நன்மை செய்​யும் மரங்​களைத்​தான் நாம் அழித்து வரு​கிறோம். நாம் வாக​னங்​களில் வேக​மாகச் செல்ல வேண்​டும் என்​ப​தற்​காக, சாலை​யோரங்​களில் உள்ள மரங்​களை​யெல்​லாம் வெட்​டிச் சாய்த்​துக்கொண்டே இருக்​கிறோம். மரங்​களை வெட்டி வீழ்த்​தும் இந்​தத் தவறை இன்​னும் எத்​தனை ஆண்​டு​களுக்​கு​தான் நாம் செய்​து​கொண்​டிருக்​கப் போகிறோம் என்று தெரிய​வில்​லை.

வாக​னங்​களி​லிருந்து வெளிவரும் புகை​யில் உள்ள கரியை உறிஞ்​சுவதற்​காவது நாம் மரங்​களை விட்​டு​வைக்க வேண்​டும். மரங்​களை அழித்​த​தால் பருவ நிலைகள் மாறி​விட்​டன. தென்​னிந்​திய மாநிலங்​களில் தமிழ்​நாடு​தான் தண்​ணீர் வளம் குறைந்த மாநிலம். ஆகவே, மரங்​களை அழிப்​ப​தால் தமிழ்​நாட்​டுக்​கு​தான் அதிக பாதிப்பு ஏற்​படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x