Published : 16 Aug 2025 06:46 AM
Last Updated : 16 Aug 2025 06:46 AM
2024 நவம்பரில் வெயில் அதிகமில்லாத ஒரு நாள். சங்கத் தமிழில் ‘காயா’ என்றழைக்கப்படும் ‘காயாம்பூ’ குறுமரத்தை அந்தத் தாவரவியல் பூங்காவில் பார்த்தோம். அதன் சிறிய, கவர்ச்சிகரமான நீல மலர்கள் வியப்பூட்டக்கூடியவை. பூங்காவில் நுழைந்தவுடன் இடது கைப் புறமாக நடந்து சென்றதால், இந்த மரங்களைப் பார்க்க முடிந்தது.
அந்த மரங்களிலிருந்து சற்றுத் தொலைவில் சிறு பாறைகளால் அலங்கரிக்கப்பட்ட பகுதி ஒன்று இருந்தது. அங்கு சென்றபோது எங்களுக்கு மேலும் ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அந்தச் செம்மண் நிலத்தை மேலும் அழகூட்டுவதுபோல், பளிச்சென்ற பவளம் போன்ற சிவப்பு உண்ணிகள் அங்கே ஊர்ந்துகொண்டிருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT