Published : 05 Aug 2025 06:01 PM
Last Updated : 05 Aug 2025 06:01 PM

காலநிலை மாற்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க மாங்குரோவ் காடுகள்!

இந்தியாவில் நகர்ப்புற சதுப்புநில, சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், மீட்டெடுப்பதற்கும் மாங்குரோவ் உருவாக்கப்படும் என கோத்ரெஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சூனாபாய் பிரோஜ்ஷா கோத்ரேஜ் அறக்கட்டளை, WRI இந்தியா, WWF இந்தியா, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, டாடா சமூக அறிவியல் நிறுவனம் , ஸ்டான்ஃபோர்டில் உள்ள நேச்சரல் கேப்பிடல் மற்றும் கன்சர்வேஷன் இன்டர்நேஷனல் ஆகிய கூட்டணியில் இந்த மாங்க்ரோ காடுகள் உருவாக்கப்படுகிறது. காலநிலை மாற்றம், விரைவான நகரமயமாக்கல், நில பயன்பாட்டு மோதல்கள் ஆகியவற்றால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை உணர்ந்து, சென்னை, மும்பை நகரங்களில் இந்த முன்னெடுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இதுகுறித்து, கோத்ரேஜ் எண்டர்பிரைசஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நிரிகா ஹோல்கர் கூறுகையில், “ சதுப்புநிலங்கள் வெறும் சுற்றுச்சூழல் இடையகங்கள் அல்ல - அவை கார்பன் பெட்டகங்கள், பல்லுயிர் சரணாலயங்கள். குறிப்பாக லட்சக்கணக்கான மக்களைப் பாதுகாக்கும் அமைதியான காவலாளிகள் . எங்கள் கூட்டணி மூலம் நகர்ப்புற இந்தியாவில் இத்தைகைய முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதன் சிக்கல்களை வழிநடத்த அறிவியல், கொள்கை , மக்கள் ஆகியவற்றை ஒன்றிணைக்க முடியுமென நாங்கள் நம்புகிறோம். செயற்கைக்கோள் மேப்பிங், ட்ரோன்கள் , புவிசார் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், சதுப்புநில ஆரோக்கியத்தைக் கண்காணிக்க முடியும். ” என்றார்.

உலக வள நிறுவனத்தின் (WRI), இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் பாய், ”மாங்குரோவ் மரங்கள் உயிருள்ள கட்டமைப்பு போன்றவை, ஆனால் அவற்றைப் பாதுகாப்பது மக்களைச் சார்ந்திருக்கிறது. அந்தவகையில் கடற்கரைப் பகுதி மக்களைப் பொறுப்பாளர்களாக மாற்றுவது நீண்ட காலப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியம். கல்வி, பங்கேற்பு, அனைவரையும் உள்ளடக்கிய திட்டமிடல் ஆகியவற்றின் மூலம்,மாங்குரோவ் மரங்களைப் பாதுகாப்பது நகர்ப்புற மக்களின் பொறுப்பு என்கிற உணர்வை உருவாக்கிட முடியும். ” எனத் தெரிவித்தார்.

எம். எஸ். சுவாமி நாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் சவுமிடா சுவாமிநாதன், ” மாங்குரோவ் மரங்கள் புயல் பாதுகாப்பு, கார்பன் சேமிப்பு, மீன்வள ஆதரவு போன்ற மதிப்புமிக்க பயன்களை வழங்குகின்றன, ஆனால் இவை பெரும்பாலும் நகர்ப்புற திட்டமிடலில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இந்தப் பயன்களை அளவிடுவதன் மூலம், மாங்குரோவ் மரங்களைப் பாதுகாப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் வலுவான வாதங்களை முன்வைக்க முடியும். மேலும் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் கொள்கைகளை ஊக்குவிக்க முடியும்” எனப் பேசினார்.

உலக வனவிலங்கு நிதியத்தின் இந்தியா திட்ட இயக்குநர் டாக்டர் சேஜல் வோரா கூறுகையில், ”மக்களை மாங்குரோவ் காடுகளின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க வைப்பது, நகரவாசிகளை இயற்கையுடன் இணைக்கிறது. இது முக்கிய தகவல்களைத் தருவதோடு, சுற்றுச்சூழல் பொறுப்பு உணர்வையும் வளர்க்கிறது.” என்றார்.

கோத்ரேஜ் 1985 முதல், மாங்குரோவ் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறது. அவர்களின் “ Magical Mangroves” திட்டம், கடலோர இளைஞர்களை பாதுகாப்பு பணிகளுக்கு ஊக்கப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x