Published : 08 Feb 2025 06:41 AM
Last Updated : 08 Feb 2025 06:41 AM
உலக அளவில் கடல்மீன் அறுவடை ஆண்டுக்கு ஒன்பது கோடி டன் (ஒரு டன் = 1,000 கிலோ). பதிவுபெறாத அறுவடையையும் சேர்த்துப் பார்த்தால் 15 கோடி டன். இது உயிரியல்ரீதியிலான வளம்குன்றா எல்லையை மீறிய அறுவடை (unsustainable yield). இதில் கணிசமான பகுதி உணவு மதிப்பற்ற துணை அறுவடைகளே. பொருளாதார மதிப்பு வாய்ந்த 260 மீன் இனங்களில் பெரும்பான்மையும் அழிந்துவிட்டன, பலவும் அருகிவருகின்றன.
சீனத்தின் 5,64,000 கலன்கள்! - உலகிலேயே அதிக மீன்பிடிக் கலன்களை வைத்திருக்கிறது சீனம் - 5,64,000 கலன்கள்! 500க்கு மேற்பட்ட சீனக் கப்பல்கள் நம் கடல்களில் மீன்பிடிப்பதாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் உள்ளன. இந்தியாவில் இன்று புழங்கிவரும் மீன்பிடிக் கலன்களின் எண்ணிக்கை (7.5 லட்சம்) தேவையை மிஞ்சி மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. அதில் ஐந்து லட்சம் மரபான (இயந்திரம் பயன்படுத்தாத) கலன்கள் தவிர்த்த மற்றவை இயந்திர/ விசைப்படகு வகையாகும். 24 மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட கலன்கள் 10,000. அரசுகள் தரும் மிகையான மானியங்களே இதற்கு முக்கியக் காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT