Published : 02 Nov 2024 07:34 AM
Last Updated : 02 Nov 2024 07:34 AM

ப்ரீமியம்
கூடு திரும்புதல் - 22: நசுக்கப்பட்ட திணைக்குடியின் அக்கறை

இழுவை மடியின் கிளறுப் பலகைகள் கடல் தரையின் உயிர்ப்பான தன்மையைச் சிதைத்துவிட்டன என்பதற்குப் பாரம்பரிய மீனவர்கள் பல சான்றுகளைச் சுட்டிக்காட்டுகின்றனர். ஓலைக்குடாவைச் (ராமேஸ்வரம்) சார்ந்த கெவிகுமார் (1972) சங்கு குளிக்கச் செல்வதுண்டு. ‘கடலடியில் மூழ்கிச் சங்குகளைத் தேடும்போது டிராலர் மடி இழுத்த பகுதிகளில் டிராக்டர் சக்கரங்களின் தடம் பதிந்தது போன்று வெறுந்தரையாய்க் கிடக்கும், எந்த உயிரினங்களையும் அந்தப் பகுதியில் பார்க்க முடியாது’ என்கிறார் இவர்.

‘கேரளத்துல பூராவும் போட்டு மடியடிச்சித்தாம் அங்கவுள்ள மடையயெல்லாம் அழிச்சிற்றானுவ; போ(ர்)டுபலகைய (otter board) வெச்சி கடலடியில இருக்கிற சேறு, சகதி எல்லாத்தையும் தூரயெடுத்து உட்டுர்ரதுனால இறாலு தங்கி வாழ்றதுக்கு எடமில்லாமப் போயிருது. மணப்பாட்டு மீன் திட்டில் இழுவை மடியடிச்சு அழிக்கப்புடாதுன்னுதாம் அந்தக் காலத்துலயே நாங்க போராடினோம்’ என்கிறார் உவரி மீனவர் அந்தோணிசாமி (1951). டிராலர் மடியுடன் இணைக்கப்பட்டிருக்கும் கிளறுபலகைகள் (ஆட்டர் போர்டுகள்) தரையைக் கிளறி வழித்தெடுத்து விடுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x