Published : 19 Oct 2024 06:14 AM
Last Updated : 19 Oct 2024 06:14 AM
வலசைப் பறவைகள், அதன் வாழிடப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட ‘உலக வலசைப் பறவைகள் நாள்’ ஆண்டுதோறும் மே, அக்டோபர் இரண்டாம் சனிக்கிழமை உலக நாடுகளால் கொண்டாடப்படுகிறது. வலசைப் பறவைகளைக் கண்டுகளிக்க நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதில்லை. நமது வீடுகளின் அருகிலேயே, பலவித வலசைப் பறவைகளைக் காண இயலும். இதற்குக் கூர்ந்த அவதானிப்பும், பறவை நோக்குதலில் ஆர்வமும் இருந்தால் போதும்.
பறவைகள் வலசை போதல் இயற்கையின் வியத்தகு செயல் பாடாகும். இதுபற்றிப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், வலசை தொடர்பான பல கேள்வி களுக்கு இன்றளவும் முழுவதுமாகப் பதில் கிடைக்கவில்லை. காந்தப் புலம், நிலவு-நட்சத்திரம் போன்ற வான் சார்ந்த, பெரும் மலைகள், கடலோரப் பகுதி போன்ற நிலம் சார்ந்த அடையாளங்களை வலசை போதலுக்குப் பறவைகள் பயன்படுத்து வதாக அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT