Published : 19 Oct 2024 06:07 AM
Last Updated : 19 Oct 2024 06:07 AM
2012இல் தொண்டி மீனவர் சுப்பிரமணியனைச் சந்தித்தபோது, தனது விடலைப் பருவ அனுபவத்தை (1960கள்) இப்படி நினைவுகூர்ந்தார்: “என் வலையில கெடச்ச கறுப்புச் சிங்கிறாலப் பாத்து, வத்தயில இருந்து அழுதிருக்கேன். ‘யாரானும் வந்து கழிச்சிட்டுப் போங்க, எனக்கு வலயே வேணாம்’னு வத்தயில போட்டுட்டு ஓடிவந்திருக்கேன். அவ்வளவு படும். அந்த இனமே அழிஞ்சு போச்சு. சிங்கி இனத்தோட முட்டையை எல்லாம் அள்ளிக்கொண்டு வந்து, கரையில போட்டுருவாங்க. கடல வழிச்சுத் தொடச்சிட்டாங்க.”
1920களில் கட்டேகட் கடலில் (டென்மார்க்) மீன்வள அறிஞர் வில்லி கிறிஸ்டென்சனின் தாத்தாவுக்குக் கிடைத்த அனுபவமும் சுப்பிரமணியன் சொல்வதைப் போன்றதுதான். அயிலை மீனுக்குத் தாத்தா விரித்திருந்த வலை முழுக்கக் கொடைச் சூரை மீன் பாய்ந்திருந்ததைப் பார்த்து அயர்ந்துபோனார். சூரைமீன் சுற்றிக் கிடக்கும் வலையைச் சரிசெய்து, மீண்டும் விரிப்பது மிகவும் சிரமமான வேலை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT