Published : 21 Sep 2024 06:06 AM
Last Updated : 21 Sep 2024 06:06 AM
உயர் வெப்பநிலை மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பல வகைப்பட்டவை: மன அழுத்தம், பதற்றம், நிலைகொள்ளாமையினால் தூக்கம் கெடுதல்; உடலின் நோய்த் தடுப்பாற்றல் வீழ்ச்சி; உடலைக் குளிர்விக்கும் முயற்சியாக இதயத் துடிப்பு அதிகரித்து, நிறைய வியர்க்கும்.
உடல் நீர்ச்சத்தையும் அயனிகளையும் இழந்து, கடும் தாகம் ஏற்பட்டு, வாய் உலர்ந்து, மந்தநிலை உண்டாகும். அடுத்த கட்டம், உடலால் அதன் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த இயலாத நோய்மைநிலை. உடல் வியர்ப்பது நின்றுபோய், மூர்ச்சையாகிவிடும் நிலை. இதை வெப்ப மயக்கம் (heat stroke) என்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT