Published : 24 Aug 2024 06:10 AM
Last Updated : 24 Aug 2024 06:10 AM
தமிழ்நாடு, புதுவை கடற்கரையின் மணல்வெளி கட்டமைவில் காலவாரியாக நேர்ந்துவரும் மாற்றங்களை கடற்கரை மணல்வெளி கட்டமைப்புக் கண்காணிப்புத் திட்டத்தின்கீழ் ஒரு மக்கள் அறிவியலாளர் குழு ஆவணப்படுத்தி வருகிறது. மணல்வெளியின் சாய்வு, அகலம், மணலின் அளவு, வகை போன்ற கூறுகள் பதிவுசெய்யப்பட்டுவருகின்றன. காலநிலை அறிவியலுக்காக இதுபோன்ற தளங்களை உருவாக்க ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.
ஆதார அடிப்படையில் கொள்கை: ஆக, பருவநிலை மாற்றம் குறித்த ஆதாரங்கள் மக்கள் களங்களிலிருந்து திரட்டப்பட வேண்டும்; காலநிலைச் சிக்கலை எதிர்கொள்வதற்கான கொள்கைகளை அவற்றின் அடிப்படை யிலேயே அரசு வகுக்க வேண்டும். இப்படிப்பட்ட, ஆதாரங்களின் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம்தான் (evidence based policy making) மக்களிடையே நடைமுறை மாற்றத்தை ஏற்படுத்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT