Published : 20 Jul 2024 06:05 AM
Last Updated : 20 Jul 2024 06:05 AM
உலகெங்கும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட Community Conservation Fellow-கள் 32 பேரில் நானும் ஒருவராக இருந்தேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பல்வேறு வகைக் களப்பயிற்சியுடன் International Society for Ethonobiology சார்பாக மொராக்கோ நாட்டில் மராக்கேசு எனும் பண்டைய நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட Biodiversity and Cultural landscape குறித்த பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
நிகழ்வுக்காக மொராக்கோவுக்குப் பயணிக்கத் திட்டமிட்டபோது நான் போக நினைத்த ஒரே இடம் ஜபல் மூசா. உயிரியல் கண்ணோட்டத்தில் நான் அங்குப் போக நினைத்ததற்கான காரணம்: GREPOM/Birdlife Maroc (https://www.grepom.org/) என்கிற அமைப்பு பாறு கழுகுகளைக் காக்கச் சிரத்தையுடன் அங்கு பணிபுரிந்து வருவதை சி.இ.பி.எப். அமைப்பின் சமூக ஊடகப் பக்கத்தில் ஜாக்டுர்டாப் எழுதியிருந்ததை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT