Published : 20 Jul 2024 06:00 AM
Last Updated : 20 Jul 2024 06:00 AM

ப்ரீமியம்
கூடு திரும்புதல் - 11: பசுமை - மாற்று ஆற்றல்கள்

சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேதிப் பொறியியல் பேராசிரியர்களான ஜிதேந்திர சங்க்வாய், யோகேந்திர குமார் ஆகிய இருவரும் 2024 ஏப்ரல் இறுதியில் ஒரு புதிய செய்தியை வெளியிட்டுள்ளனர். கரிம வளியைக் கடலுக்கடியில் உயரழுத்தத்தில் நிரந்தரமாக ஓய்வுகொள்ள வைத்துவிடலாம் என்பதுதான் அந்தச் செய்தி. கரிமச் சுமையைக் குறைத்து, காலநிலைப் பிறழ்வை நேர்செய்வதற்கு இது பாதுகாப்பான தீர்வு என்பது இந்த அறிஞர்களின் கருத்து. ஹைட்ரேட் கரிமத்தை (hydrate of carbon) சேமிப்பதற்கு வங்காள விரிகுடாவை அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

நாட்டின் பல ஆண்டு பசுங்குடில்வளி உமிழ்வுக்கு நிகரான கரிமவளியைச் சேகரித்து நிரந்தரமாகவும் பத்திரமாகவும் கடலடி வண்டல் படிவுகளுக்குள் சேமித்து வைத்துவிடலாம். கடலுக்கடியில் 500 மீட்டர் ஆழத்தில், தாழ்ந்த வெப்பநிலையில் கரிம வளியைத் திரவக் குட்டைகளாகவோ, சூழலியல் பாதிப்பில்லாத பனிக்கட்டி போன்ற திட-நீர்மப் படிகமாகவோ வைத்திருப்பது சாத்தியம் என்கின்றனர் இவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x