Last Updated : 22 Jun, 2024 07:45 AM

 

Published : 22 Jun 2024 07:45 AM
Last Updated : 22 Jun 2024 07:45 AM

ப்ரீமியம்
பறவைப் பயணம்: புதையல் வேட்டையா, சமூகச் செயல்திட்டமா?

புள்ளி மூக்கு வாத்து, செந்நீலக் கொக்கு

பறவை நோக்குதலா? அதில் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு அதனால் என்ன கிடைக்கும்? - 2012ஆம் ஆண்டில் நான் பறவை நோக்கலில் ஈடுபட்டபோது என்னிடம் பலரும் எழுப்பிய கேள்விகள் இவை. முதல் இரண்டு கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்க முடிந்தாலும், மூன்றாவது கேள்விக்கு ‘இயற்கையைப் புரிந்துகொள்ளுதல், அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி’ என்று நான் சொன்ன பதில் பலருக்குத் திருப்திகரமாக இல்லை. வார இறுதி நாள்களில் சில தன்னார்வலர்களுடன் இணைந்து இயற்கைச் சூழலில் பறவையினங்களை அடையாளம் காண்பதும், அவற்றின் குணாதிசயங்களை நோட்டமிடுவதுமான‌ பொழுதுபோக்கில் ஈடுபடலானேன். அதன் பிறகு அலுவலகத்திலோ வீட்டிலோ இருக்கும்போது மைனா, தவிட்டுக்குருவி போன்ற பறவைகள் எழுப்பும் ஒலிகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். இத்தனை ஆண்டுகளாக நாம் எளிதாகக் கேட்டுவந்த இந்த ஒலிகள் என் செவிகளை அடையாமல் இருந்தது ஆச்சரியம்தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x