Published : 09 Mar 2024 06:00 AM
Last Updated : 09 Mar 2024 06:00 AM
காற்று மாசு, ஒலி மாசு அளவிற்கு ஒளி மாசு குறித்துப் பொதுத் தளத்தில் விவாதிக்கப்படுவதில்லை. ஆனால், மற்ற மாசுகளைப் போல் ஒளி மாசுவும் சுற்றுச்சூழலுக்கும், மனித ஆரோக்கியத்துக்கும் பெரும் தீங்கை உண்டாக்குகிறது. செயற்கை ஒளியினால் ஒவ்வோர் ஆண்டும் இரவு வானத்தின் வெளிச்சம் 7 – 10% வரை அதிகரித்துவருவதாகச் சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
முன்பெல்லாம் நகர்ப்பகுதிகளுக்கு வெளியே சென்றாலே நட்சத்திரங்களை, ஏன் சில இடங்களில் பால்வெளியையே பார்க்க முடிந்தது. ஆனால், இன்றைக்குக் கிராமப்பகுதிகளிலும்கூட அளவுகடந்த ஒளி மாசின் காரணமாக நட்சத்திரங்களே தெரிவதில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT