Published : 17 Feb 2024 06:03 AM
Last Updated : 17 Feb 2024 06:03 AM
சோளகர்கள் உயர்ந்த மரங்களில் உள்ள தேனடைகளிலிருந்து தேன் சேகரிக்கும்போது, கொஞ்சம் தேனைத் தரையை ஒட்டியுள்ள கிளைகளில் வைத்துவிட்டு வருவது வழக்கம். புலிகளால் மரம் ஏற இயலாது என்பதால், அவர்கள் புலிகளுக்கு எட்டும்விதத்தில் இப்படித் தேன் வைக்கின்றனர். காட்டில் அவற்றுக்கு உள்ள உரிமைகளில் எதுவும் விட்டுப் போய்விடக் கூடாது என்பது சோளகர்கள் மனத்தில் ஆழப் பதிந்துள்ளது.
சோளகர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பிலிகிரி குன்றுகளுக்கு அருகில் உள்ள காட்டில் வசிக்கும் பழங்குடிகள். இவர்களைப் போலப் பல தலைமுறைகளாகக் காட்டில் வாழ்ந்துவரும் சமூகங்கள்தாம் புலிகளுக்கு அச்சுறுத்தலாக அரசு நிர்வாகங்களால் கருதப்படுகின்றனர். காடுவாழ் மக்கள் பலரை வெளியேற்றி விட்டுத்தான் புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT