Published : 06 Jan 2024 06:06 AM
Last Updated : 06 Jan 2024 06:06 AM

ப்ரீமியம்
மாடம் வழியே விரிந்த பறவை உலகம்!

புள்ளி ஆந்தைகள், படம்: ரேணுகா விஜயராகவன்

மூன்று வருடங்களுக்கு முன்னால் யாராவது என்னிடம், “உனக்குத் தெரிந்த பறவைகளைப் பற்றிச் சொல்” என்று கேட்டிந்தால் “காக்கா, கோழி, புறா, மயில், கிளி, கழுகு” என்று ஐந்தாறு பறவைகளின் பெயர்களை மட்டும் சொல்லி இருப்பேன். ஆனால், இன்றோ ஐம்பதுக்கும் மேற்பட்ட பறவைகளின்‌ பெயர்கள், அவற்றின் வாழ்க்கை முறை என்று‌ நிறைய‌ தெரிந்துவைத்திருக்கிறேன். ஒவ்வொன்றின் அழைப்பொலியை வைத்தே என்ன பறவை என்பதைச் சொல்லிவிடுவேன்.

‘பறவை‌ நோக்குதலே’ (Bird Watching) நான் படித்த பாடம். ஆனால், அதற்கென்று வீட்டை விட்டு எங்கும்‌ செல்லவில்லை. இருந்தும் நான்‌ சொன்னதெல்லாம்‌ எப்படிச் சாத்திய மானது? நான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள என் வீட்டு உப்பரிகை/மாடம் (பால்கனி) தான் காரணம்‌. பறவைகளின் அழகிய, அதிசய உலகினுள்‌ இப்படித்தான் நுழைந்தேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x