Published : 06 Jan 2018 11:18 AM
Last Updated : 06 Jan 2018 11:18 AM
2017-ம் ஆண்டு விவசாயம், அது சார்ந்த பிரச்சினைகள் குறித்து வெளியான சில முக்கியமான புத்தகங்களின் பட்டியல் இங்கே...
அறிவியல் பார்வையில் ஹைட்ரோகார்பன்
த.வி.வெங்கடேஸ்வரன்,
சி.இ.கருணாகரன்,
வ.சேதுராமன், ப.கு.ராஜன்
‘அறிவியல் மக்களுக்கே’ என்ற முழக்கத்துடன் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது இப்புத்தகம். ஹைட்ரோகார்பன் திட்டத்தைப் பற்றிய பல்வேறு அம்சங்களை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், அறிவியலாளர்களைக் கொண்டு, அறிவியல் பார்வையுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். அரசியல் கலக்காமல், கேள்வி - பதில் வடிவத்தில், உள்ளதை உள்ளபடி தெரிவிப்பது இந்நூலின் சிறப்பு.
அறிவியல் வெளியீடு, 245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம்,சென்னை- 86.
044-28113630
விலை- ரூ.35/-
தொகுப்பு: சிவா
பட்டினிப் புரட்சி
பரிதி
புத்தகத்தின் பெயரைப் பார்த்தால் பட்டினியால் வாடும் மனிதர்களைப் பற்றியது என்ற எண்ணம் வருவது இயல்பு. ஆனால், உண்மையில் சமூகம், சுற்றுச்சூழல், உயிரியல் எனப் பல துறைகளில் இன்றிருக்கும் பிரச்சினைகளையும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அபத்தங்களையும் பற்றிப் பேசுகிறது இந்நூல். நம்முடன் வாழும் மனிதர்களில் மூன்றில் ஒருவர் முறையான உணவின்றித் தவிப்பதற்குக் காரணம், தாம் வாழும் சமூக அமைப்புதான் என்பதை அதிரும்படி உணரவைக்கிறது இந்நூல்
விடியல் பதிப்பகம், 23/5, ஏ கே ஜி நகர்,மூன்றாம் தெரு,
உப்பிலிபாளையம், கோவை. விலை- ரூ.450/-
உங்களுடைய
ஒரு கோப்பை காபியில்
எவ்வளவு நஞ்சு?
உருவாக்கம்: பினாங்கு
பயனீட்டளர்கள் சங்கம்
தமிழில்: டி.கே.ரகுநாதன்
நாம் அன்றாடம் விரும்பி அருந்தும் பானம் காபி. அதைக் குடிப்பது பொதுப் பழக்கமாகவும் நிர்பந்தமாகவும் ஆகியிருக்கிறது. இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த நூல் நீங்கள் அருந்தும் ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு இருக்கிறது என்பதை ஆய்வுபூர்வமாக விவரிக்கிறது.
அடையாளம் பதிப்பகம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி
0433-2273444 விலை - ரூ.40/-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT