Published : 17 May 2023 05:35 PM
Last Updated : 17 May 2023 05:35 PM
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), தமிழ்நாடு அரசு மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகப் பல்வேறு சுயவேலைவாய்ப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு திறன் வளர்ச்சி பயிற்சிக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திறன் வளர்ச்சி பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ நிறுவனமே முழுமையாக ஏற்கிறது. இப்பயிற்சியில் பங்கெடுப்பவர்களுக்குத் தங்கும் இடம், உணவு ஆகியவை இலவசம். 10 முதல் 17 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி: ஐந்து முதல் பிளஸ் 2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
பயிற்சி விவரம்: இணைய வழியில் மட்டும் இப்பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித்தொகையாக ரூ. 375 வழங்கப்படும். மேலும், பயிற்சி நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழும், மாதந்தோறும் ரூ.13,500 முதல் ரூ.17,000 வரை வருமானம் ஈட்டும் வாய்ப்பும் கிடைக்கக்கூடும்.
நான்கு சக்கர வாகன உதவியாளர், ஓட்டுநர், காவலர், வாடிக்கையாளர் சேவை அலுவலர், குழாய்ப் பணியாளர், சமையல்காரர், வீட்டு வேலை உதவியாளர் போன்ற பல்வேறு பணிகளுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இணைய வழியில் மட்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://iei.tahdco.com/skill_reg.php) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://bit.ly/42HYXZT என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT