Last Updated : 14 Nov, 2022 12:19 AM

 

Published : 14 Nov 2022 12:19 AM
Last Updated : 14 Nov 2022 12:19 AM

வாசகர்களை எழுத்தாளர்களாக மாற்றும் சுய வெளியீட்டுச் சேவைகள்

காட்சி ஊடகத்தின் வளர்ச்சியால் மக்களிடையே வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டது என்பதே சமூகத்தின் பரவலான எண்ணமாக இருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல என்பதை உணர்த்தும் விதமாகச் சுய வெளியீட்டுச் சேவைகளின் வளர்ச்சி உள்ளது. சுய வெளியீட்டுத் தளங்களில் வெளியாகும் புத்தகங்களின் எண்ணிக்கையும், அதில் அறிமுகமாகும் எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக உள்ளன. இந்தச் சுய வெளியீட்டுச் சேவைகளின் வளர்ச்சி, எழுத்தாளர்களிடையே அது ஏற்படுத்தும் ஆரோக்கியமான தாக்கம் உள்ளிட்டவை குறித்து எழுத்தாளர் நா. சொக்கன் அவர்களுடனான கலந்துரையாடலின் சுருக்கம் இது.

சேலம் ஆத்தூரில் பிறந்த நா. சொக்கம் தற்போது பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றிவருகிறார். பள்ளி நாட்களிலேயே எழுதத் தொடங்கிய அவரின் முதல் சிறுகதை 1997 இல் வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்ற 'திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாறு', ’நல்ல தமிழில் எழுதுவோம்’ ஆகிய புத்தகங்கள் அவர் எழுதியவையே.

நா. சொக்கன்

புத்தகங்களைச் சுயமாக வெளியிட உதவும் இணையவழி பதிப்பக தளங்கள் எழுத்தாளர்களுக்கு எவ்வாறு உதவுகின்றன?

பல ஆண்டுகளாக, எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகள் வெளியீட்டாளர்களின் தரத்தைப் பூர்த்தி செய்யவில்லை அல்லது நீண்ட காத்திருப்பு காலங்கள் போன்ற காரணத்திற்காக (பாரம்பரிய) வெளியீட்டாளர்களின் நிராகரிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர், இதுபோன்ற சமயங்களில், சுய-வெளியீட்டுச் சேவைகள் எல்லா வயதினருக்கும் பெரும் நிம்மதியையும், சுதந்திரத்தையும் வழங்கியுள்ளன. வெளியீட்டு வாய்ப்புகளுக்கான எளிதான அணுகல், விரிவான சுய-வெளியீட்டு அம்சங்கள் ஆகியவை ஒரு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் ஆசிரியர்கள் தங்கள் எழுத்துகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. மேலும், வெளிப்படையான புத்தக விற்பனைத் தன்மை, நல்ல உரிமத்தொகை வருவாய் வளரும் எழுத்தாளர்களுக்குச் சிறந்த வாழ்க்கையை வழங்குகின்றன. உங்கள் வாழ்நாளில் நீங்கள் உங்கள் படைப்புகளை வெளியிட்டு மக்களால் படைப்பாளராகக் கருதப்படுவீர்களா என்று நீங்கள் இனி யோசிக்க வேண்டியதில்லை. இன்று எழுத்தாளர்களாகிய நமக்கு இதைவிட ஒரு சிறந்த வாய்ப்பு இருக்க முடியாது.

அமேசான் கிண்டில் போன்ற இணைய வழி சுய வெளியீட்டுத் தளங்கள் வளரும் எழுத்தாளர்களுக்கு அளிக்கும் அனுகூலங்கள் என்ன?

அமேசான் கேடிபி (Amazon KDP), வாசகர்களைக் கண்டறிவதுடன் அவர்களின் வருவாயை அதிகரிக்க உதவுவதன் மூலம் சுயாதீன ஆசிரியர்களை ஆதரிக்கிறது. இதன் காரணமாக, பல எழுத்தாளர்கள் சுயமாக வெளியிடப்பட்ட படைப்புகளின் வருமானத்தின் மூலம் ஒரு வாழ்வாதாரத்தைப் பெறவும், நிதி ரீதியாகச் சுயாதீனமாக இருக்கவும் அல்லது கடினமான காலங்களில் தங்கள் குடும்பங்களை ஆதரிக்கவும் முடிந்தது.

அமேசான் கேடிபி, எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை சுயமாக வெளியிடவும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான வாசகர்களுக்குப் படைப்புகளை எடுத்துச் செல்லவும் உதவுகிறது. இங்குள்ள அனைத்தும் மிகவும் வெளிப்படையானவை, மேலும் பார்வையாளர்களின் கருத்து, எவ்வாறு விற்கப்படுகிறது, எவ்வளவு சம்பாதிக்கப் போகிறார்கள் என்பது பற்றிய விவரம் ஆசிரியர்களுக்கு எளிதாகக் கிடைக்கிறது.

இன்றைய தலைமுறையின் வளரும் எழுத்தாளர்கள் சுயமாகப் புத்தகங்களை இணையத்தில் வெளியிடுவதற்குத் தேவைப்படும் சூட்சுமங்கள், வழிமுறைகள் என்ன?

முதலில், நிறையக் கவனியுங்கள். நிறையப் படியுங்கள். நிறைய யோசியுங்கள். இந்த மூன்று விஷயங்களும் உங்கள் எழுத்துக்கு மெருகூட்டும் மூலப்பொருட்கள். இரண்டாவதாக, எழுதவேண்டும் என்பதற்காக எழுதுங்கள். நீங்கள் அதில் மகிழ்ச்சியை உணர்ந்தால், அதுவே உங்கள் எழுத்துப் பயணத்திற்கான உந்துதல். பணம், புகழ், விருதுகள் போன்ற மற்ற அனைத்து புற நன்மைகளும் பிறகு வந்து சேரும், ஆனால் உங்கள் எழுத்துக்கான முதன்மைக் காரணமாக இவை இருக்கக்கூடாது.

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் உலகில், சுய வெளியீடு தளங்கள் எப்படி வாசகர்களை எழுத்தாளராக மாற்ற உதவுகின்றன?

சமீப காலங்களில், சுய-வெளியீட்டுச் சேவை தளங்கள் புதிய எழுத்தாளர்களுக்கான வாய்ப்பை தந்தது மட்டுமின்றி, வாசகர்களுடன் அவர்களை இணைத்து ஒற்றை ஊடகத்தின் மூலம் உலகளாவிய பார்வையாளர்களை அடைய அவர்களுக்கு உதவுகிறது. எழுதுவதில் ஆர்வம் மற்றும் வல்லமை கொண்ட வாசகர் சமூகத்திற்கு இது அதீத ஊக்கத்தை அளித்துள்ளது. முன்னதாக, எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளைப் புத்தக வடிவாக வெளியிட்டு, கடைகளில் அவை கிடைக்கப்பெற்று, வாசகர்கள் அந்த புத்தகத்தை வாங்கி தங்கள் அலமாரிகளில் நினைவுச் சின்னமாக வைத்த பிறகு தான் தங்களை வெற்றிகரமான எழுத்தாளர்களாகக் கருதுவார்கள். சமீப காலங்களில், சுய-வெளியீட்டுச் சேவை தளங்கள் வளரும் எழுத்தாளர்கள் தங்களை வெற்றியாளராக நிலைநிறுத்துவதைச் சற்று எளிதாக்கியுள்ளன. இலட்சக்கணக்கான வாசகர்களை உடனடியாகச் சென்றடைய எளிதான, விரைவான, வெளிப்படையான மற்றும் முதலீடு இல்லாத வழியை வழங்கும் சுய-வெளியீட்டுச் சேவை தளங்களின் அறிமுகம் மூலம் இப்போது வளரும் எழுத்தாளர்களுக்கு தங்கள் படைப்புகளை வெளியிடுதலை மிகவும் அணுகக்கூடியதாக மாறியுள்ளது.

இந்தச் சுய வெளியீட்டுத் தளங்கள் எப்படி எழுத்தாளர்களுக்குப் பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்து தருகின்றன?

சுய-வெளியீடு என்பது ஆர்வமுள்ள வளரும் எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும், ஏனெனில் இது அவர்களின் படைப்புகளைச் சொந்தமாக வைத்திருக்கவும், படைப்பின் கருப்பொருள், தலைப்பு போன்றவற்றைத் தீர்மானிக்கவும் சுதந்திரம் அளிக்கிறது. ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் தங்கள் இலக்கியப் படைப்பை வெளியிடுவதற்கு பதிப்பகங்களின் வாசலில் காத்திருந்த காலங்கள் போய்விட்டன. சுய-வெளியீட்டுச் சேவைகளின் வளர்ச்சி பெருங்கடலென வாய்ப்புகளை ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்குத் தந்துள்ளது. இரவு பகலாகக் கண்விழித்து தங்கள் காதல், பயம், துன்பம், உணர்ச்சி ஆகியவற்றை எழுதிப் பிரசுரிக்கவும், பாராட்டப்படவும் கனவு காணும் வளரும் எழுத்தாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

வளரும் எழுத்தாளர்கள் தங்களை மேன்மையான எழுத்தாளராக நிலைநிறுத்திக் கொள்வதற்குத் தேவைப்படும் எழுத்துப்பயணத்தை கட்டமைப்பதற்கு அமேசானின் ’பென்’ (Pen) எனும் முன்னெடுப்பு எவ்வாறு உதவுகிறது?

அமேசான் கேடிபி பென் டு பப்ளிஷ் (Amazon KDP Pen to Publish) போட்டியானது வணிகரீதியான வெற்றியையும் உலகளாவிய கவனத்தையும் வழங்குவதன் மூலம் பல ஆசிரியர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. இந்தப் போட்டி, எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தார்வத்தை வாசகர்களுடன் இணைத்து, அவர்களை மகிழ்வித்து மற்றும் ஊக்குவித்து புதிய உலகத்தைப் படைக்க உதவுகிறது. போட்டியில் பங்கேற்பதன் மூலம், அவர்கள் புத்தகங்களை வெளியிட்ட எழுத்தாளர்களாக மாறுவது மட்டுமல்லாமல், அவர்களின் மின் புத்தகங்கள் வாசகர்களிடையே அதிகமாக வாசிக்கப்படுவதற்கும் வாய்ப்பளிக்கிறது. பண முடிப்புகள், விருதுகள், மூத்த எழுத்தாளர்களின் வழிகாட்டுதல் ஆகியவை இந்த எழுத்தாளர்களில் சிலருக்கு முழுநேர எழுத்தாளராகப் பயணத்தைத் தொடர தூண்டுதல் அளிக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x