Last Updated : 08 Nov, 2022 06:34 AM

 

Published : 08 Nov 2022 06:34 AM
Last Updated : 08 Nov 2022 06:34 AM

சேதி தெரியுமா?

அக்.28: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடவர்களுக்கு இணையான சமஊதியம் மகளிருக்கும் வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.

அக்.30: குஜராத்தில் மோர்பி நகரில் மச்சு ஆற்றில் கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 55 குழந்தைகள் உட்பட 141 பேர் உயிரிழந்தார்கள்.

அக்.31: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

அக்.31: பாலியல் வழக்குகளில் ‘இரு விரல் சோதனை’க்கான தடையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அச்சோதனைகளைப் பயன்படுத்தும் நபர்கள் தவறான நடத்தையில் ஈடுபட்ட குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள் என்று எச்சரித்தது.

அக்.31: மும்பையில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட மகளிருக்கான ஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கொலம்பியா அணியை 1 - 0என்கிற கோல் கணக்கில் ஸ்பெயின் வீழ்த்தியது.

நவ.1: இந்தியாவின் முதல் எண்ம ரூபாய் (டிஜிட்டல் ரூபாய்) திட்டம் சோதனை அடிப்படையில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.

நவ.1: உலகின் நான்காவது பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரும் இடதுசாரி தொழிலாளா் கட்சித் தலைவருமான லூலா டி சில்வா வெற்றிபெற்றார்.

நவ.2: குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. - தொகுப்பு: மிது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x