Published : 27 Sep 2022 09:10 AM
Last Updated : 27 Sep 2022 09:10 AM
செப்.16: இந்தியாவின் சிறந்த உயிரியல் பூங்காவாக டார்ஜிலிங் உயிரியல் பூங்கா தேர்வானது. இரண்டாவதாக வண்டலூர் உயிரியல் பூங்காவும் தேர்வானது. மத்திய உயிரியல் பூங்காக்களுக்கான ஆணையம் இந்தத் தரப்பட்டியலை வெளியிட்டது.
செப்.18: ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் 2023 ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது.
செப்.19: சென்னை ஓபன் டபுள்யு.டி.ஏ. 250 டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின் 17 வயது வீராங்கனை லிண்டா ஃபுருவிர்டோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
செப்.20: மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் லண்டனில் உல்ள வின்ட்சர் கோட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
செப்.21: இந்தியாவில் முதன்முறையாக ஆவுளியா (Dugong) பாதுகாப்பகம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோர பகுதிகளை உள்ளடக்கிய பாக் நீரிணை பகுதியில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
செப்.22: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம். துரைசாமி ஓய்வு பெற்றதையடுத்து புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக டி. ராஜா பொறுப்பேற்றார்.
செப்.23: நட்சத்திர டென்னிஸ் வீரரான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT